Home
Mobile

வருகிறது "உடைக்க முடியாத" சாம்சங் ஓஎல்இடி(OLED) தொடுதிரை.!

உலகின் முதல் உண்மையான மடிப்பு கைப்பேசி வரும் ஆண்டில் உங்கள் கைகளில். வருங்கால சாம்சங் கேலக்ஸி தொலைப்பேசிகளில், இந்த மடிக்கும் தொடுதிரை வசதியை வழங்குமென்று சாம்சங் நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.

By Sharath

உலகின் முதல் உண்மையான மடிப்பு கைப்பேசி வரும் ஆண்டில் உங்கள் கைகளில். வருங்கால சாம்சங் கேலக்ஸி தொலைப்பேசிகளில், இந்த மடிக்கும் தொடுதிரை வசதியை வழங்குமென்று சாம்சங் நிறுவனமும் உறுதிசெய்துள்ளது. இப்பொழுது இருக்கும் சாம்சங் கேலக்ஸி தொலைப்பேசிக்கு இவை சாத்தியம் இல்லை என்றாலும், வரும்காலங்களில் உண்மையிலேயே மடக்கக்கூடிய கைப்பேசியை சாம்சங் நிறுவனம் வழங்கும்.

கொரிய எலக்ட்ரானிக் நிறுவனம் சமீபத்தில், சாம்சங் நிறுவனத்திற்குச் சிறந்த வளையத்தக்க போன் பேனல்(panel)-க்கான சான்றிதழ் வழங்கியுள்ளது. அதேபோல் சாம்சங் நிறுவன குழு மடக்கக்கூடிய போன் பேனல்களை ஆட்டோமொபைல்கள், இராணுவ சாதனங்கள் மற்றும் போர்ட்டபிள் கேம் கன்சோல்கள் போன்றவற்றில் இதன் பயன்பாடுகளை உபயோகிக்க முடிவு செய்துள்ளது.

வெற்றியைத் தொடர்ந்து

வெற்றியைத் தொடர்ந்து

இம்முயற்சி வெற்றியைத் தொடர்ந்து புதிய மடக்கக் கூட்டிய மடிக்கணினியை உருவாக்க சாம்சங் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சந்தையில் கிடைக்கக்கூடிய வளையத்தக்கப் போன் பேனல்கள் கடுமையான தாக்கத்திற்கு உட்படுத்தும்போது உடைந்து போகின்றன, அது புதிய சாம்சங் திரையில் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளது சாம்சங் நிறுவனம்.

கடுமையான சோதனை

கடுமையான சோதனை

சுமார் 4 அடி உயரத்தில் இருந்து தொடர்ந்து 26 முறை கைவிடப்பட்டும், அதன் முன் பக்கங்களிலும் மற்றும் விளிம்புகளிலும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று சாம்சங் நிறுவனம் தனது கடுமையான ஆயுள் சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

வளையத்தக்க கர்வுடு டிஸ்பிளேயுடன்

வளையத்தக்க கர்வுடு டிஸ்பிளேயுடன்

அனைத்து சாம்சங் முதன்மை தொலைப்பேசிகள் இப்போது வளையத்தக்க கர்வுடு டிஸ்பிளேயுடன் வருகிறது. ஆனால் மடிப்பு திரை அடிப்படையைக் கொண்ட தொலைப்பேசிகளுக்கு மட்டுமே இந்த பேனல் போட முடியும். சாம்சங் நிறுவனம் மடிப்பு ஓஎல்இடி பேனல் திரையுடன் கூடிய மடக்கும் மொபைல் போன்களைப் பயனாளர்களுக்கு வெளியிடத் தீவிரம் கட்டி வருகிறது.

சாம்சங் ஹவாய்(Huawei) போட்டி

சாம்சங் ஹவாய்(Huawei) போட்டி

சாம்சங் நிறுவனம் ஹவாய்(Huawei) நிறுவனத்துடன் போட்டியிட்டு வருகிற நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கலந்தாய்வில் சாம்சங் மொபைல் நிறுவனத்தின் தலைவர் டி.ஜே.கோ கூறுகையில் கம்பியில்லா கேலக்ஸி மடிப்பு தொலைப்பேசி இந்த ஆண்டு விற்பனைக்கு வருமென்று நிருபர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung has 'unbreakable' OLED phone screen in the works : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X