யுத்தத்தில் குதிக்க தயாராகும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

By Super
|
யுத்தத்தில் குதிக்க தயாராகும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் இருந்து எந்த பொருட்கள் வெளி வந்தாலும் வாடிக்கையாளர்கள் அதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கின்றனர். அந்த வகையில், சாம்சங் நிறுவனத்தில் இருந்து எந்த மொபைல்கள் வெளி வந்தாலும், மக்களிடம் இருந்து ஆரவார வரவேற்பு கிடைக்கிறது.

இந்த வரிசையில் ஜிடி-எஸ்-7500 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது சாம்சங். இந்த புதிய மொபைல் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனை ஒத்திருக்கும் என்று கருதப்படுகிறது. சாம்சங் ஜிடி-எஸ்-7500 மொபைல் உயர்ந்த ரக திரை நுட்பத்தை கொண்டிருக்கும் என்ற எதிர் பார்ப்பையும் கொடுக்கிறது.

இது ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் தன்மை கொண்டது. இதனால் ஆன்ட்ராய்டு மார்கெட்டில் இருந்து புதிய அப்ளிக்கேஷன்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் லெட் ஃப்ளாஷ் வசதியுடன் கூடிய 5 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளதால், இனிமையான பொழுதுகளில் புகைப்படம்,

வீடியோ போன்றவற்றை எடுத்து மகிழலாம்.

வாடிக்கையாளர்கள் அடுத்ததாக முக்கியம் என்று கருதுவது வைபை தொழில் நுட்பம். இந்த வைபை இருந்தால் நெட்வொர்க் வசதியினை பற்றி கவலைபட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஜிடி-எஸ்-7500 மொபைலிலும் வைபை வசதி உள்ளது. எனவே எளிதாக பிரவுசிங் செய்யலாம். ஆடியோ மற்றும் வீடியோ, புளூடூத் போன்ற

வசதிகளை பயன்படுத்தலாம்.

32ஜிபி வரை மைக்ரோஎஸ்டி மெமரி ஸ்லாட்டை பயன்படுத்தி சேமிப்பு வசதியை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் வாடிக்கையாளர்களின் நேரத்தை, பயனுள்ளதாக மாற்றும். இன்னும் விலை அறிவிக்கப்படாத இந்த ஸ்மார்ட்போன், இந்த மாத இறுதிக்குள் வெளிவரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X