Home
Mobile

விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 4

By Karthikeyan
விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 4

சாம்சங் நிறுவனம் ஜிடி-19400 என்ற ஒரு புதிய போனை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீப காலத்தில் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த போன் கேலக்ஸ் எஸ் 4ஆக இருக்கும் அல்லது கேலக்ஸி குடும்பத்திலிருந்து வரும் இன்னொரு புதிய போனாக இருக்கும் என்று ஒரு முக்கிய தகவல் தெரிவிக்கிறது.

இந்த புதிய போன் கேலக்ஸி எஸ் 3க்கு அடுத்து வரும் போனாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த புதிய போனில் இருக்கும் தொழில் நுட்ப வசதிகளைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்றாலும் இது ஆன்ட்ராய்டு 5.0 இயங்கு தளத்தில் வரும் என்று தெரிகிறது. அதோடு 1.8 ஜிஹெர்ட்ஸ் எஆர்எம் ப்ராசஸரில் வரும் என்று தெரிகிறது.

இந்த புதிய போனில் மாலி 400 எம்பி ஜிபியு மற்றும் 720பி டிஸ்ப்ளே போன்றவையும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த போனில் 2ஜிபி அல்லது 3ஜிபி ரேம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. கேமராவைப் பொருத்தவரை இந்த போனில் அதிக சக்தி வாய்ந்த கேமரா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது 8எம்பிக்கும் அதிகமான அளவுள்ள கேமராவுடன் இந்த போன் வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் வரும் புத்தாண்டில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போனைப் பற்றிய தகவல்களை இன்னும் சாம்சங் உறுதிப்படுத்தவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X