Home
Mobile

புதிய ஜிடி ஐ-9300 ஸ்மார்ட்போனை வழங்கும் சாம்சங்!

By Super
புதிய ஜிடி ஐ-9300 ஸ்மார்ட்போனை வழங்கும் சாம்சங்!

புதிய ஜிடி ஐ-9300 (சாம்சங் கேலக்ஸி எஸ்-3) என்ற ஸ்மார்ட்போனை ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உருவாக்கி உள்ளது சாம்சங் நிறுவனம். 4.6 இஞ்ச் அகன்ற திரையின் மூலம் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொண்டது.

மல்டி டச் ஸ்கிரீன் திரையினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனை கையாள்வது ரொம்ப சுலபம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் 126 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

இதன் ஆன்ட்ராய்டு 4.0.3 இயங்குதளத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மூலம் சிறப்பான தொழில் நுட்ப வசதியினை பெற முடியும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1,400 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சாம்சங் எக்ஸினோஸ் 4412 பிராசஸரும் உள்ளது.

கூடுதல் வசதியினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.

இந்த டியூவல் வசதி கொண்ட கேமராவின் மூலம் சிறந்த புகைப்படங்களையும், வீடியோவினையும் எடுத்து குவிக்கலாம். மேலும் 1 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 32 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி வசதியினையும் கொடுக்கும்.

ஸ்மார்ட்போனில் பிரவுசிங் வசதி இருந்தால் பயணங்களின் போது கூட தகவல்களை எளிதாக தேடி எடுக்க முடியும். இன்றைய சூழலில் பிரவுசிங் வசதி மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஜிடி ஐ-9300 ஸ்மார்ட்போனில் சிறப்பான ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பத்தின் மூலம் பிரவுசிங் வசதியினை பெற முடியும்.

இது மட்டும் அல்லாது 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் பெறலாம். விருப்பமான இசையை கேட்டும் பார்த்தும் மகிழ இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியும் உள்ளது.

இது போன்ற பொழுதுபோக்கு அம்சத்தினை பெற நீடித்து உழைக்கும் பேட்டரி மிக அவசியமாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனில் 2050 எம்ஏஎச் லித்தியம்-அயான் பேட்டரியும் உள்ளது.

இந்த ஆற்றல் வாய்ந்த பேட்டரி ஆடியோ, வீடியோ ப்ளேயர் வசதிக்கு மட்டும் அல்லாமல், 3ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கும் சிறப்பாக உதவும்.

இத்தகைய ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் உலகமே கையில் உள்ளது போலத்தான். இந்த ஸ்மார்ட்போனை பெற வாடிக்கயாளர்கள் இன்னும் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X