4ஜி வசதியுடன் புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்கும் சாம்சங்!

சாம்சங்கின் தயாரிப்புகளைப் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சாம்சம் தினமும் ஒரு புதிய புதிய செய்தியுடன் வருகிறது. சாம்சங்கின் புதிய செய்தி என்னவென்றால் அது ஒரு புதிய ஸ்மார்ட்போன் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட் போன் 4ஜி எல்டிஇ நெட்வொர்க்கில் இயங்கும் சக்தி வாய்ந்தது. இந்த ஸ்மார்ட் போனிற்கு எஸ்பிஎச்-எல்300 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த புதிய ஸ்மார்ட் போனின் படங்கள் இணைய தளங்களில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த புதிய போன் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும். அதோடு சினாப்ட்ராகன் எஸ்4 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் 5எம்பி பின்பக்க கேமராவையும் இந்த போன் தாங்கி வரும் என்று தெரிகிறது.
மேலும் இந்த சாம்சங் போன் கூகுள் வாலெட் கொண்ட என்எப்சி வசதியைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த போனின் வேகம் அதிகமாக இருக்கும். அதற்கேற்றவாறு இந்த ஸ்மார்ட் போன் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது. இதன் 4 இன்ச் சூப்பர் அமோலெட் ப்ளஸ் டிஸ்ப்ளே மிகவும் பளிச்சென்று இருக்கும்.
இந்த ஸ்மார்ட் போன் 4ஜி வசதியில் வருவதில் இதில் விரைவாக ப்ரவுஸ் செய்யவும் முடியும். அதே நேரத்தில் இதன் பேட்டரியும் இந்த போனுக்கு நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது.
சாம்சங்கின் இந்த புதிய ஸ்மார்ட் போன் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications