Home
Mobile

விற்பனையில் முதலிடம் பிடித்த சியோமி-ஒப்பாரி வைக்கும் சாம்சங்.!

ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிகம் செலுத்தி வந்த சாம்சங் நிறுவனம் இன்று 2ம் இடத்தில் போய் ஒப்பாரி வைக்கின்றது. மீண்டும் முதலிடம் பிடித்து சியோமி ஸ்மார்ட் போன் நிறுவனம் நெ.1 இடத்தை பிடித்துள்ளது. மேலும்

இந்தியா என்பது மக்கள் தொகையில் 2-ம் இடத்தில் இருக்கின்றது. ஒரு காலத்தில் மக்கள் தொகை என்பது பிரச்னையாக இருந்தாலும், இன்று வர்த்தக உலகத்தில், முக்கியமானதாக இருக்கின்றது.

விற்பனையில் முதலிடம் பிடித்த சியோமி-ஒப்பாரி வைக்கும் சாம்சங்.!

எந்த பொருட்கள் விற்பனைக்கு வந்தாலும், இந்தியாவில் நுகர்வோர்களின் எண்ணங்களும், தேவைகளும் மாறுப்பட்டதாகவே இருக்கும். இதுபோலவே ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிகம் செலுத்தி வந்த சாம்சங் நிறுவனம் இன்று 2ம் இடத்தில் போய் ஒப்பாரி வைக்கின்றது.

மீண்டும் முதலிடம் பிடித்து சியோமி ஸ்மார்ட் போன் நிறுவனம் நெ.1 இடத்தை பிடித்துள்ளது. மேலும் தனது ஆதிகத்தையும் செலுத்தி வருகின்றது.

சியோமி நிறுவனம் நெ1:

சியோமி நிறுவனம் நெ1:

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, சியோமி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக, கவுன்டர்பாய்ண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓப்போ, சியோமி, விவோ:

ஓப்போ, சியோமி, விவோ:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஆண்டுகளாக, தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் கோலோச்சி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவைச் சேர்ந்த சியோமி, விவோ, ஓப்போ உள்பட பல நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கியதால், கடும் போட்டி உருவானது.

11 % நுகர்வு அதிரிப்பு:

11 % நுகர்வு அதிரிப்பு:

இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவில் ஸ்மார்ட்போன் நுகர்வு 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறும் கவுன்டர்பாய்ண்ட் ஆய்வு நிறுவனம், இந்தியாவில் விற்பனையான மொத்த ஸ்மார்ட்போன்களில் ஸியோமி நிறுவனத்தின் பங்கு 47 சதவீதம் என்றும் கூறியுள்ளது.

அடுத்த இடத்தில் மற்ற நிறுவனங்கள்:

அடுத்த இடத்தில் மற்ற நிறுவனங்கள்:

இதற்கு அடுத்த இடங்களில் சாம்சங், ஓப்போ, விவோ மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் இருப்பதாகவும் கவுன்டர்பாய்ண்ட் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விற்பனையில் சியோமி:

விற்பனையில் சியோமி:

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னும் மற்றொரு நிறுவனம் நடத்திய ஆய்வில் சியோமி நிறுவனம் முன்னணியில் இருக்கின்றது என்று தெரிவித்தது. அந்த ஆய்விலும் சாம்சங் நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்திய சந்தையிலும் பெரும்பாலான மற்ற நிறுவனங்களை காட்டிலும் சியோமி அனைத்து வசதிகளையும் வழங்கி வந்தது.

ஓப்பாரி வைக்கும் சாம்சங்:

ஓப்பாரி வைக்கும் சாம்சங்:

சியோமி, ஓப்போ, விவோ, மைக்ரோ மேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையாலும், மற்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் வழங்கும் வசதிகளை தனது போன்களில் வழங்க முடியாமல் சாம்சங் நிறுவனம் தவித்து வருகின்றது. மேலும், சியோமி நிறுவனம் விதவிதமாக மாடல்களையும் அறிமுகம் செய்து வசதிகளையும் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

 ஆன்லைன் விளம்பரம்:

ஆன்லைன் விளம்பரம்:

சியோமி நிறுவனம் மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஆன்லைன், ஆப்-லைன் விளம்பரங்களை செய்து விற்பனையிலும் முன்னிலை பிடித்துள்ளது. இதனால் அதிக வாடிக்கையாளர்கள் கவர்ந்து இழுந்து வருகின்றது சியோமி நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Samsung gets a leg-up in the Xiaomi battle : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X