Home
Mobile

மொத்த மார்கெட் சல்யூட்.. 10 இன்ச் டிஸ்பிளே.. 200MP கேமரா.. 5437mAh பேட்டரி.. மிரளவிட்ட Galaxy Z TriFold மாடல்!

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி இசட் டிரைபோல்டு (Samsung Galaxy Z TriFold) களமிறங்க இருக்கிறது. ஏற்கனவே, வெளியீட்டு தேதி கசிந்தது. இப்போது, கேமரா, பேட்டரி, சிப்செட் போன்ற பீச்சர்கள் கசிந்து, மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.

ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் டிரைபோல்டு (மூன்றாக மடிக்ககூடிய) ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தி வருகின்றன. இதில் ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் ஸ்மார்ட்போன் முதல் டிரைபோல்டு மாடலாக களமிறங்கிவிட்டது. அடுத்து சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் டிரைபோல்டு களமிறங்க இருக்கிறது. இதன் பீச்சர்கள் கசிந்துள்ளன.

மொத்த மார்கெட் சல்யூட்.. 10 இன்ச் டிஸ்பிளே.. 200MP கேமரா.. மாடல்?

சாம்சங் கேலக்ஸி இசட் டிரைபோல்டு அம்சங்கள் (Samsung Galaxy Z TriFold Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.5 இன்ச் கவர் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 10.0 இன்ச் மெயின் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இசட்7 போல்டு ஸ்மார்ட்போனை போலவே 200 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது.

அன்போல்டு செய்யப்பட்டால் 3.9 எம்எம் தடிமன் வர இருக்கிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட் கிடைக்க இருக்கிறது. டிப்ஸ்டர் எவன் பிளாஸ் (Evan Blass) எக்ஸ் தளத்தில் இந்த பீச்சர்கள் பகிரப்பட்டுள்ளன. இதுபோக மீதமுள்ள பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. அதன்படி இந்த சாம்சங் கேலக்ஸி இசட் டிரைபோல்டு ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்க இருக்கிறது.

அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன்யுஐ 8 (OneUI 8) கிடைக்க இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. அதேபோல விலை மற்றும் வெளியீட்டு விவரங்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன.

ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி இசட் டிரைபோல்டு ஸ்மார்ட்போனின் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக இருக்கப் போகிறது. இந்திய மதிப்பில் ரூ.2,65,987ஆக இருக்கிறது. ஆனால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் எப்போதும் அமெரிக்காவைவிட விலை கூடுதலாகவே இருக்கும். ஆகவே, இங்கு விலை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வருடத்தில் வெளியாகலாம்.

ஏனென்றால், அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், வெளியாகவில்லை. இப்போது, டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்த 2025ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்க்கலாம். மார்கெட்டில் டிரைபோல்டு ஸ்மார்ட்போன்கள் சில நிறுவனங்களிடம் மட்டுமே இருக்கிறது.

இதில் ஹூவாய் நிறுவனம் மட்டுமே அதனுடைய டிரைபோல்டு மாடலான ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் (HUAWEI Mate XT Ultimate Design) ஸ்மார்ட்போனை சீன மார்கெட்டில் விற்பனைக்கே கொண்டுவந்துவிட்டது. ரூ.2,35,910 பட்ஜெட்டில் களமிறக்கி இருக்கிறது. இப்போதைக்கு கடும் போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் மட்டுமே இருக்கிறது.

மொத்த மார்கெட் சல்யூட்.. 10 இன்ச் டிஸ்பிளே.. 200MP கேமரா.. மாடல்?

ஏனென்றால், இதிலும் 10.2 இன்ச் ஓஎல்இடி மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. 7.6 இன்ச் கவர் டிஸ்பிளே கிடைக்கிறது. இது சாம்சங் டிரைபோல்டு ஸ்மார்ட்போனைவிட பெரிய டிஸ்பிளேவாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 5600mAh பேட்டரி கிடைக்கிறது.

66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. டிரிபிள் அன்போல்டு செய்தால் 3.6 எம்எம் தடிமன் மட்டுமே வர இருக்கிறது. டூயல் அன்போல்டு செய்தால் 4.75 எம்எம் தடிமன் மற்றும் மொத்தமாக போல்டு செய்தால் 7.45 எம்எம் தடிமன் வர இருக்கிறது. ஆனால், இதைவிட ஸ்லிம்மாக சாம்சங் கேலக்ஸி இசட் டிரைபோல்டு மாடல் இருக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z TriFold With 200MP Camera 5437mAh Battery Tipped Ahead of Launch What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X