Home
Mobile

மார்க்கெட்டை சுருட்டி மடியில் போட்ட Samsung புது போன்.. 10-இன்ச் டிஸ்பிளே, 16GB ரேம், 5600mAh பேட்டரி!

சாம்சங் (Samsung) நிறுவனம் ஆனது "இனிமேல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் மார்க்கெட் என்து" என்று கெத்தாக கூறும்படியாக, அதன் கேலக்ஸி இஸட் சீரீஸின் கீழ் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் (Samsung Galaxy Z TriFold) ஸ்மார்ட்போனாகும்.

பெயர் குறிப்பிடுவது போலவே இது சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்வைஸ்-போல்டிங் ஸ்மார்ட்போன் (Twice-folding smartphone) ஆகும். அதாவது முழுமையாக விரிக்கப்படும் போது 10.0-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவையும் வழங்கும், அதே நேரத்தில் 6.5-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளேவையும் வழங்கும்.

Samsung புது போன்.. 10-இன்ச் டிஸ்பிளே, 16GB ரேம், 5600mAh பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் விலை மற்றும் விற்பனை: சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது வருகிற 2025 டிசம்பர் 12 ஆம் தேதி முதல் தென் கொரியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறது.

பின்னர் சீனா, தைவான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற உலகளாவிய சந்தைகளிலும் வாங்க கிடைக்கும். இந்திய சந்தைக்கு வருமா வராதா என்பது குறித்து தகவல் இல்லை. மேலும் சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் கிராஃப்டட் பிளாக் கலர் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 8
- 2160 x 1584 பிக்சல்ஸ்
- 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 1600நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 120ஹெர்ட்ஸ் வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 10-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்னர் டிஸ்பிளே

- 1,080x2,520 பிக்சல்ஸ்
- 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
- 422பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 2,600நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 120ஹெர்ட்ஸ் வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 6.5-இன்ச் முழு-HD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷன்
- ரியர் பேனலில் செராமிக்-கிளாஸ் ஃபைபர் வலுவூட்டப்பட்ட பாலிமர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி48 ரேட்டிங்
- மேம்பட்ட ஆர்மர் அலுமினியத்துடன் இணைக்கப்பட்ட டைட்டானியம் ஹிஞ் ஹவுசிங்
- இரண்டு வெவ்வேறு அளவிலான ஹிஞ்கள் மற்றும் டூயல்-ரயில் அமைப்பு

- குவால்காமின் ஆக்டாகோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபார் கேலக்ஸி சிப்செட்,
- 16 ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 200 மெகாபிக்சல் (எப்/1.7) பிரைமரி கேமரா

- 102 டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 12 மெகாபிக்சல் (எப்/2.2) அல்ட்ராவைடு கேமரா
- OIS மற்றும் 30x டிஜிட்டல் ஜூம் திறன்களுடன் 10 மெகாபிக்சல் (எப் /2.4) டெலிஃபோட்டோ கேமரா
- கவர் மற்றும் இன்னர் டிஸ்பிளேக்களில் இரண்டு 10-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமராக்கள்

- 5600mAh பேட்டரி
- 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத் 5.4 மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் மடிக்கும்போது 159.2x75.0x12.9மிமீ, விரிக்கும்போது 159.2x214.1x3.9மிமீ
- எடை சுமார் 309 கிராம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z TriFold With 10 inch Inner Display Launched Sale From December 12 Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X