செஞ்சிட்டா போச்சு.. முன்னாடி 10-inch டிஸ்பிளே, பின்னாடி 200MP ட்ரிபிள் கேமரா.. புது Samsung போன்.. எந்த மாடல்?
தென் கொரியாவிலிருந்து வெளியான சில வீடியோக்களின் வழியாக சாம்சங் (Samsung) நிறுவனமானது 10-இன்ச் டிஸ்பிளே (10-inch Display) மற்றும் 200 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருவது தெரிய வந்துள்ளது.
அது சாம்சங்கின் முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி இஸட் ட்ரை போல்ட் (Samsung Galaxy Z Tri Fold) மாடலாகும். கிஸ்மோசீனா (Gizmo China) வலைதளத்தின் சமீபத்திய அறிக்கையின்படி - எஸ்பிஎஸ் நியூஸ் (SBS News) மற்றும் ஓமோக்யோ எலெக்ட்ரானிக்ஸ் (Omokgyo Electronics) பகிர்ந்துள்ள வீடியோக்களின் வழியாக, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேக்கள் மற்றும் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் நெருக்கமாக பார்க்க முடிகிறது.

வெளியான வீடியோவின் படி, கேலக்ஸி இஸட் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனின் இருபுறமும் இரண்டு கீல்கள் (hinges) நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இது இன்னும் காம்பாக்ட் ஆன சிறிய வடிவத்தை உருவாக்க இரண்டு முறை மடிகிறது. விரிக்கப்படும்போது இந்த ஸ்மார்ட்போனின் மொத்த டிஸ்பிளேவின் அளவு 10-இன்ச் ஆக விரிவடைகிறது, அதே நேரத்தில் எக்ஸ்டர்னல் கவர் டிஸ்பிளே (External Cover Display) சுமார் 6.5-இன்ச் உள்ளது.
வெளிப்புறமாக மடிக்கும் வடிவமைப்பை (Outward folding section) கொண்டுள்ள ஹூவாய் நிறுவனத்தின் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனை (Huawei Tri Fold Smartphone) போலல்லாமல், சாம்சங்கின் இந்த புதிய மாடல் ஆனது மூடும்போது டிஸ்பிளேவை பாதுகாக்க இரண்டு பேனல்களையும் உள்நோக்கி மடிக்கிறது. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் ஒரு கீல் குறுகிய ஆரத்துடனும், மற்றொன்று இன்னர் போல்ட்டுக்கு இடமளிக்க நீண்ட வளைவுடனும் உள்ளது.
இப்படியாக டூயல் கீல் அமைப்பு (Dual Hinge Structure) இருக்கும் போதிலும், சாம்சங் நிறுவனத்தின் இந்த ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனை முழுமையாக திறக்கும் போது மிகவும் மெலிதாக தெரிகிறது. மடிக்கும்போதும், விரிக்கும்போதும் சிறந்த பிடிமானத்தை உறுதி செய்வதற்காக சாம்சங் அதன் பேனல்களில் சமநிலையான எடை விநியோகத்தை (balanced weight distribution) பராமரித்துள்ளது போல் தெரிகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி இசட் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இது கேலக்ஸி இசட் போல்ட் 7 ஸ்மார்ட்போனில் உள்ளதை போலவே இருக்கிறது. அதாவது 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவைகள் இடம்பெறலாம். இன்னர் மற்றும் எக்ஸ்டர்னல் டிஸ்பிளேக்களில் பஞ்ச்-ஹோல் செல்பீ கேமராக்களும் இருக்கும்.
இது தவிர இந்த ஸ்மார்ட்போனில் டூயல ஸ்பீக்கர்கள் (Dual Speakers), பல மைக்ரோபோன்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பவர் மற்றும் வால்யூம் பட்டன்களும் உள்ளன. பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Finger Print Scanner) ஆனது பவர் கீயில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பெஸல்கள் ஆனது போல்ட் 7 மாடலில் உள்ளதை விட தடிமனாக தோன்றுகின்றன. இதற்கு அதன் சிக்கலான கீல் மெக்கானிசம் காரணமாக இருக்கலாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சாம்சங் இன்னும் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தையும், மாடல் பெயரையும் மற்றும் முக்கிய அம்சங்களையும் வெளியிடவில்லை. ஆனால் இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதிகாரப்பூர்வ வெளியீட்டை காணும் என்றும், அதன்பின்னர் இது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் வாங்க கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
கேலக்ஸி இசட் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது வெற்றிகரமாக அறிமுகமானால், அது சாம்சங்கின் போல்டபிள் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் ஆக இருக்கும். இது உற்பத்தித்திறன் மற்றும் பொழுதுபோக்குக்காக வடிவமைக்கப்பட்ட புதிய வகை மல்டி-ஃபோல்ட் ஸ்மார்ட்போன்களுக்கான (Multi Fold Smartphones) புதிய களத்தையும் அமைத்து கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








