Home
Mobile

இம்புட்டு விலையா.. ரூ.2,39,999-க்கு வந்த Samsung Galaxy Z Fold8 ஸ்மார்ட்போன்.. அப்படியென்ன இருக்கிறது?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பீச்சர்கள் மட்டுமல்லாமல், விலையை பார்த்தும் மூக்கில் விரல் வைக்கும்படி சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 (Samsung Galaxy Z Fold8) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இந்த போல்டு மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

போல்டு மாடல்களில் டூயல் கேமரா கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 கிடைக்கிறது. அதேபோல டிஸ்பிளேவும் 7.6 இன்ச் மட்டுமே இருக்கிறது. இது முந்தைய மாடல்களைவிட சிறிய டிஸ்பிளேவாக இருக்கிறது. ஆகவே, காம்பாக்ட் மாடலாக இதை பார்க்கலாம். ஆனால், பீச்சர்களில் எந்த குறையும் இல்லை.

இம்புட்டு விலையா.. ரூ.2,39,999-க்கு வந்த Samsung Galaxy Z Fold8 போன்!

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அம்சங்கள் (Samsung Galaxy Z Fold8 Specifications): 7.6 இன்ச் (1848 x 2448 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. கியூஎக்ஸ்ஜிஏ+ (QXGA+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 403 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இதுபோக எச்டிஆர்10+ (HDR10+) கொடுக்கப்பட்டு உள்ளது. 5.5 இன்ச் (1248 x 1972 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் கவர் டிஸ்பிளே கொண்டுள்ளது. டபுள்யூயூஎக்ஸ்ஜிஏ+ (WUXGA+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 428 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

இம்புட்டு விலையா.. ரூ.2,39,999-க்கு வந்த Samsung Galaxy Z Fold8 போன்!

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) பேஸ்டு ஒன் யுஐ 9 (One UI 9) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் நானோ சிம் + ஈசிம் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), டூயல் பிக்சல் ஆட்டோ போகஸ் (Dual Pixel AF) கிடைக்கிறது. 10 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 4800mAh பேட்டரி மற்றும் 45W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது.

மேலும், 20W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. போல்டு செய்தால் 9.7 எம்எம் தடிமன் மற்றும் அன்போல்டு செய்தால் 4.5 எம்எம் தடிமன் வருகிறது. மொத்தமாக 201 கிராம் எடை கொடுத்துள்ளது. டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.

இம்புட்டு விலையா.. ரூ.2,39,999-க்கு வந்த Samsung Galaxy Z Fold8 போன்!

IP48 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,79,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,99,999ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.2,39,999ஆக இருக்கிறது.

லாவெண்டர், கிராஃபைட், கிரீம் மற்றும் பிஸ்தாச்சியோ கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஜூலை 22ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகஸ்டு 8ஆம் தேதி முதல் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. சாம்சங், அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold8 With 4800mAh Battery Dual 50MP Camera Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X