Samsung ஒரே போடு.. 200MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 8 இன்ச் AMOLED டிஸ்பிளே.. Galaxy Z Fold8 Ultra வந்தாச்சு!
இதுவரை வெளியான போல்டு ஸ்மார்ட்போன் மாடல்களை தூக்கி சாப்பிடும்படியான பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா (Samsung Galaxy Z Fold8 Ultra) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 7ஆவது ஜெனரேஷன் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் அப்கிரேட்களுகள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது.
ஸ்லீக் டிசைன், ஸ்மூத் அன்போல்டிங், ஃபிளெக் டைட்டானியம் மற்றும் லாங்-லாஸ்டிங் டியூரபிலிடி கொண்ட மாடலாக சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா இருக்கிறது. அல்போல்டு செய்தால் வெறும் 0.41 செ.மீ தடிமன் மட்டுமே வருகிறது. 215 கிராம் எடை கொடுத்துள்ளது. கேலக்ஸி இசட் போல்டு6 மாடலைவிட இது ஸ்லிம் மற்றும் லைட் வெயிட்டாக இருக்கிறது.

ஃபாஸ்டர் ஏஐ பர்ஃபாமெனஸ் 21 சதவீதம் பூஸ்ட் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 15 சதவீத கிராபிக்ஸ் பர்ஃபாமென்ஸ் பூஸ்ட் செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, இதுவரையில் வெளியான சாம்சங் போல்டு மாடல்களிலேயே அதிக பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாகவும் இந்த சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா வந்துள்ளது.
200 எம்பி கேமராவுடன் லோவ்-லைட் போட்டோகிராபி (Low-light Nightography) என்ஹான்ஸ் செய்யப்பட்டுள்ளது. 8K வீடியோ ரெக்கார்டிங், ரியல் டைம் சினி எல்யூடி கலர் கிரேடிங் (Real-time Cine LUT Color Grading) கொடுக்கப்பட்டு உள்ளது. விரிவாக்கப்பட்ட கிராஃபைட் கூலிங் சிஸ்டம் (Graphite Cooling System) சிஸ்டம் கிடைக்கிறது. One UI 9 உடன் கிராஸ் டிவைஸ் ஈகோசிஸ்டம் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy Z Fold8 Ultra Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகந் 8 எலைட் ஜென் 5 கேலக்ஸி 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite Gen 5 Galaxy 3nm) சிப்செட் கொண்ட மாடலாக இருக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
8 இன்ச் (2504 x 2256 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 6.5 இன்ச் (2520 x 1080 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் கவர் டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.
422 பிபிஐ பிக்சன் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 200 எம்பி மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் குவாட் பிக்சல் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 30x ஸ்பேம் ஜூம் கிடைக்கிறது.

10 எம்பி இன்னர் மற்றும் அவுட்டர் கேமரா கிடைக்கிறது. 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 20W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP48 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,99,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,19,99ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,59,999 ஆக உள்ளது. ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகஸ்ட் 8ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. சாம்சங் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications