Home
Mobile

மிரண்டு போன மார்கெட்.. ரூ.2,59,999-க்கு இறக்கிய Samsung.. தலை சுற்றும் விலையில் புது போல்டு, ஃபிளிப் மாடல்கள்!

சாம்சங் நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் மாடல்களான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்8, சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா ஆகிய மாடல்கள் இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டன. இந்த மாடல்கள் ப்ரீ-ஆர்டருக்கும் கிடைக்கின்றன. விலை, விற்பனை மற்றும் ஆஃபர்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்8 விலை (Samsung Galaxy Z Flip8 Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,24,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,44,999 ஆகவும் இருக்கிறது. கிராஃபைட் (Graphite), கிரீம் (Cream), பிங்க் (Pink) மற்றும் மின்ட் (Mint) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

மிரண்டு போன மார்கெட்.. ரூ.259999-க்கு இறக்கிய Samsung.. தலை சுத்தும்!

ரூ.5,000 அப்கிரேட் ஆஃபர் மற்றும் பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 30 மாதங்களுக்கு ஜீரோ டவுன் பேமெண்ட் சலுகையும் கொடுக்கப்படுகிறது. சாம்சங் ஃபைனான்ஸ், டிவிஎஸ் கிரெடிட், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் பிஎஃப்எல் ஆகியவற்றில் 30 மாதங்களுக்கு ஜீரோ டவுன் பேமெண்ட் சலுகையை பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 விலை (Samsung Galaxy Z Fold8 Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,79,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,99,999 ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.2,39,999 ஆக இருக்கிறது.

மிரண்டு போன மார்கெட்.. ரூ.259999-க்கு இறக்கிய Samsung.. தலை சுத்தும்!

கிராஃபைட் (Graphite), கிரீம் (Cream), லாவெண்டர் (Lavender) மற்றும் பிஸ்தாச்சியோ (Pistachio) கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த மாடலுக்கு ரூ.10,000 அப்கிரேட் ஆஃபர் மற்றும் பேங்க் கார்டுகளுக்கு ரூ.9,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 30 மாதங்களுக்கு ஜீரோ டவுன் பேமெண்ட் சலுகையும் கொடுக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா விலை (Samsung Galaxy Z Fold8 Ultra Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,99,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,19,99 ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,59,999 ஆக உள்ளது.

கிராஃபைட் (Graphite), கிரீம் (Cream), வயலெட் ஷேடோ (Violet Shadow) மற்றும் கிரீன் ஷேடோ (Green Shadow) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. ரூ.10,000 அப்கிரேட் ஆஃபர் மற்றும் பேங்க் கார்டுகளுக்கு ரூ.9,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 30 மாதங்களுக்கு ஜீரோ டவுன் பேமெண்ட் சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்8, சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா மாடல்களை சாம்சங் மற்றும் முன்னணி ஈ-காமர்ஸ் தளங்களில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகஸ்டர் 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ப்ரீ-ஆர்டர் சலுகைகள் பிரத்யேகமாக கிடைக்கின்றன. பிரீமியம் விலைக்கு கிடைப்பதால், பட்ஜெட் பிரியர்களுக்கு இது எட்டாக் கனியாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold8 Ultra Galaxy Z Fold8 Galaxy Z Flip8 Prices Offers Sale Date in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X