அடடே.. எவ்வளவு அழகா இருக்கு பாருங்க.. Samsung களமிறக்கும் 2 அட்டகாசமான போன்கள்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5) மற்றும் கேலக்ஸி இசட் பிளிப் 5 ( Galaxy Z Flip 5) போன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கேலக்ஸி இசட் பிளிப் 5 போன் ஆனது மோட்டோ ரேசர் பிளஸ் போன் போன்று பெரிய கவர் டிஸ்பிளே, டூயல் கேமரா உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஆனது முன்பு அறிமுகமான கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும் இந்த இசட் ஃபோல்ட் 5 ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா, பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, வலது விளிம்பில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பட்டன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இணையதளத்தில் வெளியான இந்த இரண்டு போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 5 அம்சங்கள்: அதாவது 6.7-இன்ச் டைனமிக் AMOLED டிஸபிளேவுடன் இந்த கேலக்ஸி இசட் பிளிப் 5 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 2640 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 5 மாடலில் 3.4-இன்ச் செகண்டரி டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு இந்த சிறிய டிஸ்பிளே ஆனது 748 x 720 பிக்சல்ஸ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான சாம்சங் போன் அறிமுகமாகும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 5 மாடல் வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 12எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 5 மாடல் அறிமுகமாகும்.
அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 5 மாடல் 10எம்பி செல்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 3700 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போன் அறிமுகமாகும். பின்பு ப்ளூடூத் 5.2, வைஃபை 6இ, நானோசிம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 அம்சங்கள்: 7.6-இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளேவுடன் இந்த கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மாடல் அறிமுகமாகும். பின்பு 2176 x 1812 பிக்சல்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.
கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மாடல் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போன் 10எம்பி செல்பி கேமரா, 4400 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 12ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
photo courtesy: Revegnus@Tech_Reve,twitter


Click it and Unblock the Notifications