Home
Mobile

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சாம்சங் நிறுவனம் நேற்று நடைபெற்ற Unpacked நிகழ்வில் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அட்டகாசமான வடிவமைப்பு, தரமான தொழில்நுட்ப வசதி,சிறந்த கேமரா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 இசட் ஃபோல்ட்2 5ஜி சாதனம்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி சாதனம் ஆனது 7.6-இன்ச் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2208 x 1768 பிக்சல் திர்மான கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் 6.23 கவர் டிஸ்பிளே வசதியும் இவற்றுள் அடக்கம், எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகக இருக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மாற்றியமைக்கக்கூடிய பொருள், வேறுபட்ட

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது, பின்பு இது இது மாற்றியமைக்கக்கூடிய பொருள், வேறுபட்ட புதுப்பிப்பு வீத விருப்பத்தை ஒருவர் தேர்வு செய்யலாம். இரண்டு டிஸ்பிளே-க்களும் HDR10 + ஐ ஆதரிக்கின்றன.

சாதனம் குவால்காம்

குறிப்பாக இந்த புதிய சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பின்புறம் 12எம்பி பிரைமரி

இந்த சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறம் 10எம்பி கேமரா உட்பட மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 12எம்பி ரேம்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 12எம்பி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி சாதனத்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது.மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை உள்ளிட்ட தகவல்களை வெளியிடவில்லை அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold2 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X