2026 இல் இதுதான் கேமரா கிங்.. தீயா வேலை செய்யும் Samsung.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்த புக் ஸ்டைல் போல்டபிள் ஸ்மார்ட்போன் (Book style foldable smartphone) ஆனது எதிர்பார்த்ததை விட அதிகமான கேமரா அடிப்படையிலான மாற்றங்களை (Camera Changes) கொண்டு வரும் என்பது போல் தெரிகிறது. என்ன மாடல்? என்னென்ன மாற்றங்கள்? எப்போது அறிமுகம்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது - சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 (Samsung Galaxy Z Fold 8) ஸ்மார்ட்போனை பற்றித்தான். சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாம் நிலை கேமராக்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதாக ஒரு கேலக்ஸி கிளப்பின் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

கேலக்ஸி கிளப்பின் கேமராவில் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? விஷயங்கள் சுவாரஸ்யமாக மாறுவது ரியர் கேமரா செட்டப்பில் தான. இதன் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆனது அதே 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடன் வருவதாக, ஆனால் சென்சார் 10எம்பி இலிருந்து 12எம்பி ஆக மேம்படுத்தப்படலாம். இது சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ள அதே சென்சார் ஆக இருக்கலாம்.
இந்த மேம்படுத்தல் ஜூம் செய்யப்பட்ட காட்சிகளில் தெளிவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக குறைந்த ஒளி நிலைகளில் நல்ல தெளிவை வழங்கலாம். உண்மையான மாற்றம் இது அல்ல. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 ஸ்மார்ட்போனின் அல்ட்ராவைடு கேமரா இன்னும் பெரிய மாற்றத்தை காணக்கூடும்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனில் உள்ள 12எம்பி அல்ட்ராவைடில் இருந்து கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் உள்ள 50எம்பி-க்கு நகர்வதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால், இது ஃபோல்ட் சீரீஸ்க்கும் சாம்சங்கின் டாப்-ஆஃப்-தி-லைன் ஃபிளாக்ஷிப் ஸ்லாப் போன்களுக்கும் இடையிலான இடைவெளியை கணிசமாக குறைக்கும்.
எப்போது அறிமுகமாகும்? சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 2026 க்கு முன்னதாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சாம்சங்கிற்கு அதன் திட்டங்களை மாற்ற, திருத்த இன்னும் நிறைய நேரம் உள்ளது. இருப்பினும், கேலக்ஸி கிளப்பின் தகவல்கள் - கடந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களில் உண்மையாகி - நம்பகமானதாக உள்ளது
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை விவரங்கள்: பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,74,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,86,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.2,10,99 க்கும் அறிமுகமானது. இதேபோன்ற விலையை இஸட் போல்ட் 8 மாடலிலும் நாம் எதிர்பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 8 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே
- 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமரா
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4400mAh பேட்டரி
- 25W அடாப்டர் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்
- பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவு
- அளவீட்டில் விரிக்கப்பட்ட நிலையில் 4.2 மிமீ தடிமன்; மடிக்கும்போது 8.9 மிமீ தடிமன்
- எடை 215 கிராம்


Click it and Unblock the Notifications








