கோல்ட் கலர் ஃபிரேம் உடன் புதிய Samsung போன்.. Special Edition-னா இப்படி இருக்கணும்!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை வருகிற அக்டோபர் 11 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யவுள்ளது. இதை - கடந்த ஜூலை 2025 இல் இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட - கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் (Samsung Galaxy Z Fold 7 Special Edition) என்றும் கூறலாம்.
சாம்சங் நிறுவனத்தின் சீன வலைத்தளத்தின் படி, ஒரு புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி அன்று உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் (அதாவது இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு) அறிமுகப்படுத்தப்படும்.

இதுகுறித்த டீஸர் போட்டோவில் - கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மாடலை போலவே ஒரு இஸட்-ஸ்டைல் போல்டபிள் ஸ்மார்ட்போனை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. அது பிளாக் மற்றும் ரெட் கலர்களில் கோல்ட் கலர் ஃபிரேம் உடன் வரும் என்பதையும் பார்க்க முடிகிறது.
இந்த கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை. ஆஅனால் இது ஸ்டாண்டர்ட் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் ஸ்லிம் வேரியண்ட் (Slim Variant) ஆக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது முன்னர் வெளியான மாடலை விட மெலிதான வடிவமைப்பை பெறலாம்.
கூடவே இது ஓரளவு சிறந்த கேமராக்கள் மற்றும் பெரிய டிஸ்பிளேக்களையும் பேக் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கடந்த ஆண்டும் - சீனாவில் அதன் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தி இருந்தது. அது மெல்லிய மற்றும் இலகுவான வடிவமைப்பை கொண்டு வந்தது, மேலும் கேமரா மற்றும் டிஸ்பிளேவில் சில மேம்பாடுகளை கொண்டிருந்தது
எடுத்துக்காட்டாக, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்பெஷல் எடிஷனில் 8 இன்ச் இன்னர் மற்றும் 6.5 இன்ச் அவுட்டர் டிஸ்பிளேக்கள் உள்ளன. ஆனால் ஸ்டாண்டர்ட் மாடலில் 7.60 இன்ச் இன்னர் மற்றும் 6.3 இன்ச் அவுட்டர் டிஸ்பிளேக்கள் உள்ளன. இதோடு மெயின் வைட்-ஆங்கிள் ஷூட்டர் ஆனது 200 மெகாபிக்சல்களாகவும் உயர்த்தப்பட்டு இருந்தது.
ஆக ஸ்டாண்டர்ட் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்பெஷல் எடிஷனுக்கும் இடையிலும் இதேபோன்ற மேம்பாடுகளை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்திய அறிமுகத்தை எதிர்பார்க்க வேண்டாம். சாம் மொபைல் வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கை இது சீனாவில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது.
இந்தியாவில் வாங்க கிடக்கம் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் விலை என்ன? இந்த ஸ்மார்ட்ஆணின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,74,999 க்கு, 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,86,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.2,10,99 க்கும் வாங்க கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 8 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே
- 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 3 எக்ஸ்டர்னல் கேமரா யூனிட்
- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200எம்பி ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமரா
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4400mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








