Home
Mobile

ஆத்தாடி ஆத்தா.. அறிமுக தேதி வெளியான வேகத்தில் Samsung Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 விலைகள் லீக்!

சாம்சங் (Samsung) நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வை (Galaxy Unpacked 2025 Event) வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை முக்கிய அறிமுகங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீட்டு தேதி வெளியான வேகத்தில் இவ்விரு ஸ்மார்ட்போன்களின்​ ​"ஐரோப்பிய சந்தையில் எதிர்பார்க்கப்படும் சாத்தியமான விலைகள்" (Possible Prices in European Market) ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இந்த தகவலின்படி கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகியவற்றின் வெளியீட்டு விலைகள் (Launch Prices) அவற்றின் முன்னோடிகளை விட அதிகமாக இருக்கும்.

Samsung Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 விலைகள் லீக்!

நியூவேமொபியல் (NieuweMobiel) வழியாக கிடைத்த அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகியவைகள் இத்தாலிய ஆன்லைன் சில்லறை விற்பனை தளத்தில் முறையே க்யூ7 மற்றும் பி7 என்ற குறியீட்டு பெயர்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதன்படி இத்தாலியில், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 2,227.71 யூரோ (தோராயமாக ரூ.2,23,000) மற்றும் 512ஜிபி ஆப்ஷன் 2,309.03 யூரோ (தோராயமாக ரூ.2,31,100) என்கிற விலை நிர்ணயத்தை பெறும். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் 512ஜிபி ஆப்ஷன் 1,425.51 யூரோ (தோராயமாக ரூ.1,43,000) என்கிற விலைக்கு வரும்.

Samsung Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 விலைகள் லீக்!

முன்னதாக டிப்ஸ்டர் அர்சீன் லூபின் (@MysteryLupin) வழியாக, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல்களின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதன்படி கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஆனது மொத்தம் 3 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியிடப்படும்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 1ஜிபி ஸ்டோரேஜ்.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது கோரல் ரெட், ப்ளூ ஷேடோ, ஜெட் பிளாக் மற்றும் சில்வர் ஷேடோ ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய 3 ஆப்ஷன்களில் வெளியிடப்படும். இது ப்ளூ ஷேடோ, ஒயிட் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

Samsung Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 விலைகள் லீக்!

ஜூலை 9 நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ என்கிற புதிய மாடலையும் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், இந்த ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 9 நடக்கும் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வின் நேரம், லைவ் ஸ்ட்ரீம் விவரங்கள்: இந்த நிகழ்வு ஜூலை 9 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இது சாம்சங்கின் யூட்யூப் சேனல், சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் சாம்சங் நியூஸ்ரூம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்நிகழ்வில் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7, கேலக்ஸி இஸட் ஃபிளிப் 7 மற்றும் புதிய கேலக்ஸி இஸட் ஃபிளிப் 7 எப்இ ஆகிய 3 ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து சாம்சங் நிறுவனம் அதன் முதல் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட் போன் ஆன சாம்சங் கேலக்ஸி ஜி போல்ட் மாடலையும் அறிமுகம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு சாம்சங் கேலக்ஸி 8 சீரீஸ் ஸ்மார்ட்வாட்ச்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 7 Galaxy Z Flip 7 Price Leaked Galaxy Unpacked 2205 Event Launch on July 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X