வர்மா வொர்த்து வர்மா.. Galaxy S25 வாங்காம இந்த 2 Samsung போனுக்கும் தாராளமா வெயிட் பண்ணலாம்!
சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல்களை பற்றிய பல விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன.
டிப்ஸ்டர் பாண்டாஃப்ளாஷ் (@PandaFlashPro) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகிய 2 மாடல்களுமே முந்தைய மாடல்களில் இருப்பதை விட மென்மையான மற்றும் அதிக "நீடித்த ஹிங் மெக்கானிசம்" உடன் வரும். மேலும் இந்த டிப்ஸ்டர் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மாடலில் உள்ள டிஸ்ப்ளே க்ரீஸ் "கிட்டத்தட்ட போய்விட்டது". அது மிகவும் சிறியதாக தான் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

அதாவது புதிய, அதிக நீடித்த ஹிங் சிஸ்டம் மற்றும் நெகிழ்வான கிளாஸ் காரணமாக, தற்போதைய கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 உடன் ஒப்பிடும்போது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஆனது குறிப்பிடத்தக்க அளவு குறைவான விசிபிலிட்டியை (பார்வை தன்மை) கொண்டிருக்கும் என்று டிப்ஸ்டர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இந்த டிப்ஸ்டரின் கூற்றுப்படி, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகிய இரண்டு மாடல்களுமே அவற்றின் முன்னோடிகளை விட பெரிய வேப்பர் சாம்பார் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்த ஸ்மார்ட்போன்கள், பழைய மாடல்களில் இருப்பதை போலவே டேப்லெட் வடிவ ஸ்பீக்கர் டிசனையும், பட்டன் சிஸ்டமையும் தக்கவைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகியவைகள் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஒன் யுஐ 7.1 வெர்ஷன் கொண்டு டெஸ்ட் செய்யப்படுவதாகவும் இந்த டிப்ஸ்டர் கூறியுள்ளார். டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகிய இரண்டும் 2,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கிளாம்ஷெல் டிசைன் உடன் வரும் மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆனது இன்னும் அறிவிக்கப்படாத இன்-ஹவுஸ் எக்ஸிநோஸ் 2500 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன் வரும் என்று கூறப்படுகிறது. புக் ஸ்டைல் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போன் ஆனது மூன்றாவதாக 1டிபி ஆப்ஷனிலும் வரலாம். தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், தனது ஏழாவது தலைமுறை போல்டபிள் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கும் என்றும் இந்த டிப்ஸ்டர் பரிந்துரைத்துள்ளார்.
கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 போன்கள் என்ன விலைக்கு வரும்? இதே டிப்ஸ்டர் வழியாக முன்னதாக வெளியான ஒரு லீக்கின்படி, கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 போன்களின் விலையானது கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி இஸட் போல்ட் 6 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 6 உடன் ஒற்றுப்போகும்.
அதாவது பெரும்பாலான சந்தைகளில், கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 மாடல்கள் ஆனது கடந்த ஆண்டு வெளியான மாடல்களின் விலைகளிலேயே அறிமுகப்படுத்தப்படும். இது உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் கேலக்ஸி இஸட் போல்ட் 7 ஆனது ரூ.1,64,999 க்கும் மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஆனது ரோ.1,09,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








