Samsung கேலக்ஸி Z போல்ட் 7, கேலக்ஸி Z பிளிப் 7, கேலக்ஸி Z பிளிப் 7 FE.. ரேம், ஸ்டோரேஜ், கலர் ஆப்ஷன் லீக்!
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடலின் அறிமுகத்தோடு அதன் கேலக்ஸி எஸ்25 சீரிஸை "முடிவுக்கு" கொண்டு வந்துள்ளது. இனி சாம்சங் நிறுவனத்தின் முழு கவனமும் அதன் அடுத்த பிளிப் மற்றும் போல்ட் மாடல்களின் மீது மட்டுமே இருக்கும்!
அவைகள் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7), சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ (Samsung Galaxy Z Flip 7 FE) மாடல்கள் ஆகும். இந்த 3 மாடல்களும் வருகிற ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறையான வெளிப்பாட்டிற்கு முன்னதாக (முறையான அறிவிப்புக்கு முன்னதாக) இந்த 3 ஸ்மார்ட்போன்களின் ரேம், ஸ்டோரேஜ் விவரங்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
டிப்ஸ்டர் அர்சீன் லூபின் (@MysteryLupin), எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்துள்ள விவரங்களின்படி கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மாடல் ஆனது 3 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியிடப்படும்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 1ஜிபி ஸ்டோரேஜ். இது கோரல் ரெட், ப்ளூ ஷேடோ, ஜெட் பிளாக் மற்றும் சில்வர் ஷேடோ ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய 3 ஆப்ஷன்களில் வெளியிடப்படும். இது ப்ளூ ஷேடோ, ஒயிட் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடல் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். சாம்சங் நிறுவனத்தின் இந்த ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் வெளியிடப்படும்.
இம்மூன்று மாடல்களில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ தான் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனாக இருக்கும். ஏனென்றால் பிளிப் மற்றும் போல்ட் சீரிஸின் கீழ் அறிமுகமாகும் முதல் எப்இ மாடல் ஆக இது இருக்கும். இது பழைய கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் அப்படியே கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடலில் இடம்பெறலாம்.
இது உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் நிறுவனம் அதன் "எப்இ" மாடல்களில் பின்பற்றும் வழக்கம் முற்றிலுமாக மாற்றப்படும். வழக்கமாக ஒரிஜினல் மாடலில் உள்ள சில அம்சங்கள் தான் எப்இ மாடலில் இடம்பெற வேண்டும். ஆனால் சாம்சங் நிறுவனம் அதன் பழைய மாடலில் உள்ள அம்சங்களை புதிய எப்இ மாடலில் சேர்ப்பது வேடிக்கையாக உள்ளது.
ஆனால் கண்டிப்பாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடலின் விலை மலிவானதாக இருக்கும், டெக்மேனியாக்ஸின் லேட்டஸ்ட் அறிக்கையின்படி, கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடலின் விலை 1000 யூரோவிற்கும் (தோராயமாக ரூ.96,000) குறைவாக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மாடல் ரூ.82,999 க்கு இந்தியாவில் வாங்க கிடைக்கிறது.
ஆனால் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல் நல்ல அப்கிரேட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 உடன் ஒப்பிடும் போது கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் கவர் டிஸ்பிளேவில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும். இது முந்தைய மாடல்களில் காணப்படும் அசாதாரணமான போல்டர் வடிவிலான வெளிப்புற டிஸ்பிளேவை (Folder-shaped outer screen) கொண்டிருக்காது. மாறாக அதை அப்படியே அகற்றி, பெரிய, எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே டிசைனை பெறும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications