Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.33,536 ரேட் கட்ல பிரீமியம் சாம்சங்.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 6 (Samsung Galaxy Z Fold 6) போனுக்கு நம்ப முடியாத விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது, வாங்கினால், எந்தவொரு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் இல்லாமலேயே ரூ.33,356 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ள முடியும். மெயின் மற்றும் கவர் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 4400mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட இந்த போனின் விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 6 அம்சங்கள் (Samsung Galaxy Z Fold 6 Specifications): இந்த போல்டு போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஏஐ பீச்சர்களுடன் ஒன் யுஐ 6.1.1 (One UI 6.1.1) கிடைக்கிறது. அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்! ரூ.33,536 ரேட் கட்ல அல்ட்ரா பிரீமியம் சாம்சங்!

7.6 இன்ச் (2160 x 1856 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த மெயின் டிஸ்பிளேவில் கியூஎக்ஸ்ஜிஏபிளஸ் (QXGA+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 374 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கிட்டத்தட்ட டேப்லெட் கிடைக்கும் டிஸ்பிளே வருகிறது.

ஆனால், பிரீமியம் டேப்லெட்டில் கூட எல்சிடி டிஸ்பிளே மட்டுமே கிடைக்கும். இதில் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 6.3 இன்ச் (2376 x 968 பிக்சல்கள்) கவர் டிஸ்பிளே கிடைக்கிறது. இதுவும் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே பேனலாகும். இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

எச்டிபிளஸ் (HD+), ரெசொலூஷன் 410 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஆட்டோ போகஸ், ஓஐஎஸ் மற்றும் பிடிஏஎப் சப்போர்ட் கிடைக்கிறது. 3X ஆப்டிகல் ஜூமிங், 30X ஸ்பேம் ஜூமிங் மற்றும் 10 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 6 போனில் 4400mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இந்த பேட்டரியுடன் 239 கிராம் எடை வருகிறது. போல்டு செய்தால் 12.1 எம்எம் தடிமன் வருகிறது. அன்போல்டு செய்தால், 5.6 எம்எம் தடிமன் கிடைக்கிறது.

போல்டு மாடலாக இருப்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கரபிரிண்ட் சென்சார் வருகிறது. டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் IP48 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 6 போனில் சில்வர் ஷேடோ (Silver Shadow), நேவி (Navy) மற்றும் பிங்க் (Pink) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

இந்திய மார்கெட்டில் வெளியான போது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.1,64,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,31,463 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.33,536 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சாம்சங் ஏஐ பீச்சர்கள் இந்த கேலக்ஸி இசட் போல்டு 6 போனில் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 6 With 50MP Camera Sale Under Rs 132000 in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X