4-5 லட்சம் யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும்! Samsung Galaxy Z Fold 6 Special Edition அறிமுக தேதி அறிவிப்பு!
சாம்சங் (Samsung) நிறுவனம் தனது சொந்த நாடான தென் கொரியாவில் ஒரு புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்பெஷல் எடிஷன் (Samsung Galaxy Z Fold 6 Special Edition) ஆகும். கடந்த சில காலமாக வளர்ச்சியில் இருப்பதாக கூறப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங்கின் இது எப்போது அறிமுகமாகும்? ஸ்டாண்டர்ட் மாடலுக்கும் இந்த ஸ்பெஷல் எடிஷனுக்கும் என்னென்ன வேறுபாடுகள் இருக்கும்? இது வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
முன்னதாக அறிமுகமான ஸ்டாண்டர்ட் மாடலுக்கும், புதிய ஸ்பெஷல் எடிஷனுக்கும் இடையே என்ன வித்தியாசங்கள் இருக்கும்? ஸ்டாண்டர்ட் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 உடன் ஒப்பிடும்போது, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்பெஷல் எடிஷன் ஆனது ஸ்லிம் ஆன டிசைன் மற்றும் பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்பெஷல் எடிஷன் எப்போது அறிமுகமாகும்? சாம்சங் நிறுவனம் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி அன்று ஒரு புதிய கேலக்ஸி டிவைஸை காட்சிப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த டிவைஸ் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்பெஷல் எடிஷன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஒரு டீஸர் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது; ஆனால் அது வரவுள்ள டிவைஸை பற்றி எந்த விவரங்களையும் வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும் சமீபத்திய அறிக்கைகள் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்பெஷல் எடிஷன் ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா செட்டப்பை பெறும் என்று சுட்டிக்காட்டுகின்றன. அதாவது இது ஸ்டாண்டர்ட் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனில் உள்ள டேப்லெட் வடிவ கேமட யூனிட்டிற்கு பதிலாக செவ்வக வடிவிலான கேமரா செட்டப்பை பேக் செய்யலாம்.
இதன் ஸ்லிம் ஆன டிசைனை பற்றி பேசுகையில்.. இது 10.6மிமீ தடிமனை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது ஸ்டாண்டர்ட் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஆனது 12.1மிமீ தடிமனை கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக இது ஒப்பீட்டளவில் மிகவும் மெல்லியதாக இருக்கும்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்பெஷல் எடிஷன் ஆனது 8 இன்ச் இன்டர்னல் டிஸ்பிளே மற்றும் 6.5 இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். ஸ்டாண்டர்ட் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஆனது 7.6 இன்ச் இன்டர்னல் டிஸ்பிளே மற்றும் 6.3 இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக இந்த ஸ்பெஷல் எடிஷனின் வடிவமைப்பு மெலிதாகவும் ஆனால் டிஸ்பிளே இன்னும் பெரியதாகவும் இருக்கும். கூடுதல் மற்றும் நீடித்த ஆயுளுக்காக இது ஒரு டைட்டானியம் ஃபிரேமை கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் இது எஸ் பென் ஆதரவையும், 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பெயர் குறிப்பிடுவது போலவே இது லிமிடெட் எடிஷன் ஆகவே இருக்கும், அதாவது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 4 முதல் 5 லட்சம் யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தைக்கு வருமா? என்று கேட்டால் பெரும்பாலும் இது தென் கொரியா மற்றும் சீன சந்தைக்கான பிரத்யேக மாடலாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
ஸ்டாண்டர்ட் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7.6-இன்ச் இன்னர் டிஸ்பிளே + 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்களுக்கு, கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 4400mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








