Home
Mobile

பழைய மாடலில் 50MP.. புதுசுல 200MP கேமரா.. Samsung அறிமுகம் செய்துள்ள புதிய Special Edition.. என்ன மாடல்?

எதிர்பார்த்தபடியே.. சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி இஸட் போல்ட் 6 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இது அடுத்த வாரம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வாங்குவதற்கு கிடைக்கும் என்றும் சாம்சங் நிறுவனம் அறிவித்தது. சாம்சங்கின் இந்த புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ஸ்டாண்டர்ட் கேலக்ஸி இஸட் போல்ட் 6 மாடலை விட மெல்லியதாகவும், இலகுவாகவும் உள்ளது. மேலும் கேமரா மற்றும் டிஸ்பிளேவில் முக்கிய மேம்பாடுகளையும் கொண்டுவருகிறது. அப்படி என்ன மேம்பாடுகள்? இதன் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

ஸ்டாண்டர்ட் எடிஷனுக்கும் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 ஸ்பெஷல் எடிஷனுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் என்னென்ன? இது ஸ்டாண்டர்ட் எடிஷனை விட சற்றே பெரிய டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது; அதாவது இன்னர் மற்றும் அவுட்டர் என 2 வகையான டிஸ்பிளேக்களுமே பெரிகாக உள்ளது.

Samsung அறிமுகம் செய்துள்ள புதிய Special Edition.. என்ன மாடல்?

இது 8-இன்ச் இன்னர் டிஸ்பிளே மற்றும் 6.5-இன்ச் அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது 7.60-இன்ச் இன்னர் மற்றும் 6.3-இன்ச் அவுட்டர் டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. மேலும் ஸ்பெஷல் எடிஷன் ஆனது ஸ்டாண்டர்ட் எடிஷனை விட விட 1.5மிமீ மெல்லியதாகவும், 3 கிராம் இலகுவாகவும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் நிறுவனம் அதன் ஸ்பெஷல் எடிசனில், ப்ரைமரி வைட் ஆங்கிள் ஷூட்டரை 200 மெகாபிக்சல்களுக்கு உயர்த்தி உள்ளது. மீதமுள்ள லென்ஸ்களில் எந்த மாற்றமும். நினைவூட்டும் வண்ணம் ஸ்டாண்டர்ட் எடிஷனில் 50எம்பி வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. ஒப்பீட்டளவில் இது மிகப்பெரிய அப்கிரேட் ஆகும்.

மேற்கண்ட 2 மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகளை தவிர்த்து ஸ்டாண்டர்ட் எடிஷனுக்கும் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 ஸ்பெஷல் எடிஷனுக்கும் இடையே வேறு எந்த வித்தியாசங்களும் இல்லை. அதாவது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்பெஷல் எடிஷனின் கேமரா செட்டப்பில் 200எம்பி மெயின் கேமராவோடு சேர்த்து, 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் கேமரா செட்டப் இருக்கிறது.

செல்பீக்களுக்கு, கவர் ஸ்கிரீனில் 10 எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4 எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் இருக்கிறது. பேட்டரியை பொறுத்தவரை, 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 4400mAh பேட்டரியை கொண்டுள்ளது.

மேலும் இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கேலக்ஸி ஏஐ (Galaxy AI) அம்சங்களை ஆதரிக்கிறது. அறியாதோர்க்ளுக்கு இது சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிவைஸ்களுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களின் தொகுப்பாகும்.

சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 ஸ்பெஷல் எடிஷனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: தென் கொரியாவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,70,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிங்கிள் 16 ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை நிர்ணயம் ஆகும். இது மற்றும் பிளாக் ஷேடோ கலர் ஆப்ஷனின் கீழ் வாங்க கிடைக்கும்.

இது தென்கொரியாவில் சாம்சங் இணையதளம் மற்றும் டி ட்ரைக்ட் ஷாப் (T Direct Shop), கேடி, இயு பிளஸ் போன்ற பிற ஆன்லைன் சேனல்கள் வழியாக அக்டோபர் 25 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்பெஷல் எடிஷனை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி ரிங் (Galaxy Ring), கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா (Galaxy Watch Ultra), கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ (Galaxy Buds 3 Pro) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10 அல்ட்ரா (Galaxy Tab S10 Ultra) போன்ற பிற சாம்சங் தயாரிப்புகளுக்கான தள்ளுபடி கூப்பன்களை பெறுவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 6 Special Edition Launched With 2 Major Upgrades See Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X