Samsung-ன் அடுத்த சம்பவம்.. 8-இன்ச் + 6.5-இன்ச் டிஸ்பிளே, 200MP கேமராவுடன் புதிய Special Edition.. என்ன மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனமானது "வழக்கத்திற்கு மாறாக" இன்னொரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. இந்நிறுவனம் அதன் இஸட் ஃபோல்ட் மற்றும் இஸட் ஃபிளிப் சீரீஸின் கீழ் தலா 1 மாடலை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 (Galaxy Z Fold 6) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Galaxy Z Flip 6) ஆகியவைகள், கடந்த ஜூலை மாதம் நடந்த கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால் இந்த முறை (அதாவது இந்த 2024 ஆம் ஆண்டு) சாம்சங் நிறுவனம் வேறு சில சுவரசியாமன யோசனைகளை கொண்டுள்ளது போல் தெரிகிறது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்றும், அது கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் ஸ்லிம் வேரியண்ட் ஆக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் குறித்த ஆன்லைன் அறிக்கையானது, இது புக்-ஸ்டைல் ஃபோல்டபிள் போன் ஆக இருக்கும் என்றும், இதில் மிகவும் குறைவான நோட்டீஸபிள் டிஸ்பிளே கிரீஸ் இருக்கும் என்றும் கூறுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஆனது 10.6மிமீ தடிமனை கொண்டிருக்கும்.
நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஆனது 12.1மிமீ தடிமனை கொண்டுள்ளது. மேலும் இது எஸ் பென் ஆதரவையும் கொண்டு இருக்கும். எல்லாவற்றை விட முக்கியமாக இது 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பேக் செய்யும் என்றும் கூறப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்பெஷல் எடிஷன் ஆனது 8 இன்ச் இன்டர்னல் டிஸ்பிளே மற்றும் 6.5 இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.
நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஆனது 7.6 இன்ச் இன்டர்னல் டிஸ்பிளே மற்றும் 6.3 இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதாவது ஸ்பெஷல் எடிஷனின் டிஸ்பிளே இன்னும் பெரியதாக இருக்கும் என்று அர்த்தம். கூடுதல் மற்றும் நீடித்த ஆயுளுக்காக இது ஒரு டைட்டானியம் ஃபிரேமை கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது.
துரதிர்ஷ்டமான விஷயம் என்னவென்றால் சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்பெஷல் எடிஷன் ஆனது அதிக அளவில் வெளியிடப்படாமல் போகலாம். அதாவது இது சீனா மற்றும் தென் கொரியாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்பெஷல் எடிஷனின் வெளியீட்டு தேதி பற்றி எந்த விதமான தகவலும் இல்லை என்றாலும் கூட, இது இந்த ஆண்டின் இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7.6-இன்ச் அளவிலான QXGA+ டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் அவுட்டர் டிஸ்பிளேவானது 410 பிபிஐ மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவாக உள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்களுக்கு, கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது 4400mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதாவது இது 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும். மேலும் இது கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.


Click it and Unblock the Notifications








