Home
Mobile

Google க்ளோஸ்.. OnePlus பாவம்.. வருகிறது Samsung Galaxy Z Fold 6 Slim.. என்ன விலை? எப்போது அறிமுகம்?

Samsung Galaxy Z Fold 6 Slim: கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போனான (Foldable Smartphone) பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) ஸ்மார்ட்போன் ரூ.1,49,999 க்கு வெளியாகியுள்ளது. போதாக்குறைக்கு ஃபோல்ட் மாடல்களுக்கு போட்டியாக புதிய ஃபிளிப் மாடல்களும் (Flip Phones) இந்தியாவிற்கு படையெடுக்கின்றன.

டெக்னோ ஃபாண்டம் வி பிளிப் 2 5ஜி (Tecno Phantom V Flip 2 5G) மற்றும் ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் (Xiaomi MIX Flip) போன்கள் இந்திய சந்தைக்கு வரவுள்ளன. ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் உலகளாவிய விலை நிர்ணயம் ரூ.82,540 ஆக இருக்குமென்றும், டெக்னோ ஃபாண்டம் வி பிளிப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.55,000 - ரூ.60,000 க்குள் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிறது Samsung Galaxy Z Fold 6 Slim.. எப்போது அறிமுகம்? என்ன விலை?

இதற்கிடையில் சாம்சங் நிறுவனமானது, நாம் மேற்கண்ட அனைத்து மாடல்களுக்கும் வேட்டு வைக்கும் படியாக.. ஒரு புதிய போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது போல் தெரிகிறது. அது என்ன மாடல்? அது எப்போது அறிமுகம்? அது என்ன விலைக்கு வரும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? அது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் (Samsung Galaxy Z Fold 6 Slim) ஸ்மார்ட்போன் ஆகும். சுவாரசியமாக இதுவரை சாம்சங் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களிலேயே இதுதான் விலையுயர்ந்த மாடலாக (Most expensive Samsung Phone) இருக்கும் என்று கூறப்படுகிறது. வெளியான அறிக்கைகளை நம்பினால், இந்த ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் 25 அன்று அறிமுகம் செய்யப்படும்.

என்ன விலைக்கு வரும்? சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் 2100 அமெரிக்க டாலர்களாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.1,76,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். துரதிர்ஷ்டவசமான தகவல் என்னவென்றால்.. இது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாமல் போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆரம்பத்தில் இது தென் கொரியா (South Korea) மற்றும் சீனாவில் (China) மட்டுமே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் ஸ்மார்ட்போன் ஆனது 10மிமீ-க்கும் அதிகமான தடிமன் (Thickness of just over 10mm) கொண்ட சாம்சங் நிறுவனத்தின் மிகவும் மெல்லிய போல்டபிள் ஸ்மார்ட்போனாக (Samsung's thinnest foldable phone to date) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஸ்டாண்டர்ட் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 (Standard Galaxy Z Fold 6) ஆனது 12.1மிமீ அளவுடையதாக இருக்கிறது.

இது ஸ்டாண்ட்ராட் மாடலை விட மெல்லியதாக இருக்கும் அதே சமயத்தில் இன்னும் பெரிய 6.5-இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்பிளே (6.5-inch external display) மற்றும் 8-இன்ச் இன்டர்னல் டிஸ்பிளேவை (8-inch internal display) கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர்த்து புதிய ஸ்லிம் மாடலின் மற்ற வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

கேலக்ஸி கிளப்பின் அறிக்கையானது, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போன் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் 4எம்பி அண்டர் கேமராவானது ( Under Display Camera - UDC) கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் மாடலில் 5எம்பி ஆக மேம்படுத்தலாம் என்று கூறுகிறது. மற்ற கேமரா சென்சார்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் நிச்சயமாக பெரிய அளவிலான அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 6 Slim September 25 Launch Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X