Home
Mobile

எப்போடா புது மாடல் வரும்னு காத்திருப்பாங்க போல.. ரூ.15,000 விலை குறைப்பை பெற்ற Samsung Fold போன்!

சாம்சங் நிறுவனம் நடத்திய கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Galaxy Z Fold 7), கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Galaxy Z Flip 7) மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ (Galaxy Z Flip 7 FE) என மொத்தம் 3 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின.

கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ மாடல் தான் இந்த 3 ஸ்மார்ட்போன்களில் மலிவான விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.89,999 முதல் தொடங்குகிறது. அடுத்ததாக கேலக்ஸி இஸட் பிளிப் 7 மாடல் உள்ளது. இதன் விலை ரூ.1,09,999 முதல் தொடங்குறது. கடைசியாக உள்ள "காஸ்ட்லீ ஸ்மார்ட்போன்" ஆன கேலக்ஸி இஸட் போல்ட் 7 மாடலின் விலை ரூ.1,74,999 முதல் தொடங்கி ரூ.2,10,99 வரை செல்கிறது!

ரூ.15,000 விலை குறைப்பை பெற்ற Samsung Fold போன்!

புதிய மாடல் அறிமுகமான வேகத்தில், அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது ரூ.1,64,999 க்கு அறிமுகமான பழைய கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6) ஸ்மார்ட்போனின் விலையை கடுமையாக குறைத்துள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.1,64,999 க்கு பதிலாக ரூ.1,49,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7.6-இன்ச் அளவிலான QXGA+ டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் அவுட்டர் டிஸ்பிளேவானது 410 பிபிஐ மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவாக உள்ளது.

ரூ.15,000 விலை குறைப்பை பெற்ற Samsung Fold போன்!

இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

செல்பீக்களுக்கு, கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது 4400mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதாவது இது 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

புதிய சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 8 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- கவர் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16GB வரை ரேம்
- 3 எக்ஸ்டர்னல் கேமரா யூனிட்
- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்

- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமராவு
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான யுஐ 8 ஓஎஸ்
- ஐபி48 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீடு
- பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவு
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4400mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 6 Price Drops in Amazon After Galaxy Z Fold 7 Launched in India For Rs 174999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X