ப்பா.. இதான்டா Phone-னு.. EMI போட்டாச்சும் வாங்கிடணும்.. Samsung Galaxy Z Fold 6 அறிமுகம்.. என்ன விலை?
என்ன பங்காளிங்களா.. ஆள் ஆளுக்கு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை (Foldable Smartphone) அறிமுகம் செஞ்சா.. நான் பயந்துடுவேனா? நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா என்று கூறும்படியாக சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இன்று (ஜூலை 10) நடந்த 2024 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் (Galaxy Unpacked Event 2024) சாம்சங் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்க்கப்பட்ட கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 (Galaxy Z Fold 6) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC), ஒன் யுஐ 6.1.1 ஓஎஸ், கேலக்ஸி ஏஐ அம்சங்கள் (Galaxy AI Features) போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7.6-இன்ச் அளவிலான QXGA+ டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் அவுட்டர் டிஸ்பிளேவானது 410 பிபிஐ மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவாக உள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்களுக்கு, கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது 4400mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதாவது இது 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும். மேலும் இது கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் உடன் 255ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ். "பொதுவான" கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது சில்வர் ஷேடோ, பிங்க் மற்றும் நேவி ஆகிய கலர்களிலும்.. மற்றும் சாம்சங்.காம் வலைத்தளத்தில் மட்டுமே கிடைக்கும் "பிரத்யேக" கலர்களான கிராஃப்டட் பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலையை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,58,680 க்கும், 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,68,700 க்கும் மற்றும் 512ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.188,700 ரூ க்கும் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இந்திய விலை விவரங்கள் விரைவில் பகிரப்படும். இன்று (ஜூலை10) முதல் பர்-ஆர்டர் செய்ய கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் ஜூலை 24 முதல் விற்பனைக்கு வரும்.
இந்நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 உடன் சேர்த்து சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஸ்மார்ட்போனும் அறிமுகமானது. இதன் விலை ரூ. முதல் தொடங்குகிறது. இதுதவிர்த்து சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7 சீரீஸும் அறிமுகமானது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7 (Samsung Galaxy Watch 7) ஆனது தோராயமாக ரூ.25,000 க்கும், சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா (Samsung Galaxy Watch Ultra) ஆனது தோராயமாக ரூ.54,200 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக இந்நிகழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ரிங்கும் (Samsung Galaxy Ring) அறிமுகமானது, இது தோராயமாக ரூ.34,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 10 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ப்ரீ ஆர்டர் செய்ய கிடைக்கும். புதிய ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச்களை போலவே இதுவும் ஜூலை 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








