Home
Mobile

அடேங்கப்பா.. சூப்பரான அம்சங்களுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Z Fold 4: வியக்கவைக்கும் விலை.!

சாம்சங் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4)போன் ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4

அதேபோல் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன் உடன் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போனின் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தனித்துவமான டிஸ்பிளே

தனித்துவமான டிஸ்பிளே

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யும் Samsung Galaxy Z Fold 4 ஆனது 6.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6 இன்ச் இன்டெர்னல் டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளேவை விட சிப்செட் வசதிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 சூப்பரான சிப்செட்

சூப்பரான சிப்செட்

அதாவது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போனில் கேமிங் பயனர்களுக்குத் தகுந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சிப்செட்-இன் செயல்திறன் அருமையாக இருக்கும்.

கேமிங் ஆப்களுக்கு தகுந்த வேகம் கொடுக்கும் இந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் சிப்செட். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன்.

512ஜி இன்டர்னல் ஸ்டோரேஜ்

512ஜி இன்டர்னல் ஸ்டோரேஜ்

புதிய சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போனில் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போன் 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி மெயின் கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் குறைவான வெளிச்சம் உள்ள இடங்களில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 பேட்டரி

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 பேட்டரி

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போனில் 4400 எம்ஏச் பேட்டரி மற்றும் இதை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4  விலை

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 விலை

12ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போன் ஆனது ரூ.1,49,999-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதன் 16ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.1,57,999-விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போன் உடன் அறிமுகமாகும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

கேலக்ஸி இசட் ஃபிளிப் 4

கேலக்ஸி இசட் ஃபிளிப் 4

கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலி போட்டோ லென்ஸ் என்கிற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். அதேபோல் இந்த புதிய போன் 3700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 டிஸ்பிளே எப்படி?

கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 டிஸ்பிளே எப்படி?

6.7-இன்ச் பிரைமரி டிஸ்பிளே மற்றும் 2.1-இன்ச் கவர் டிஸ்பிளே வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே உங்களுக்கு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

இசட் ஃபிளிப் 4 போனின் சிப்செட் மற்றும் விலை

இசட் ஃபிளிப் 4 போனின் சிப்செட் மற்றும் விலை

கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்.

அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 போன் ஆனது ரூ.87,900-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 4 to launch on August 10: Price and features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X