Samsung Galaxy Z Fold 4 ரிவ்யூ: சூப்பர் பைக் விலையில் ஒரு ஸ்மார்ட்போன்!

|

ஃபோல்டபிள் பிரிவை பொறுத்தவரை சாம்சங் நிறுவனம் தான் முன்னணியில் இருக்கிறது. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் Galaxy Z Flip 4 மற்றும் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

இதில் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போன் பயன்படுத்த எப்படி இருக்கு என்பது குறித்து தான் பார்க்கப்போகிறோம். இந்த ஸ்மார்ட்போன் முந்தைய ஃபோல்ட் மாடலை விட பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

பெஸ்ட் அம்சங்கள்

பெஸ்ட் அம்சங்கள்

குறிப்பிடத்தக்க அம்சம்

தனித்துவமான ஃபோல்டபிள் டிஸ்ப்ளே

உயர்மட்ட செயல்திறன்

முதன்மை தர கேமராக்கள்

சிறந்த மென்பொருள் ஆதரவு

சற்று மேம்பட்டிருக்கலாம்

மென்மையான் உள்புற காட்சி

மெதுவான சார்ஜிங் வேகம்

12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

ப்ரீமியம் ரக ரசிகர்களுக்கு சிறந்த தேர்வாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும். ஸ்மார்ட்போன் போன்ற தோற்றத்துடன் டேப்லெட் அணுகுமுறை காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

Samsung Galaxy Z Fold 4 இன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டை தான் நாம் சோதனை செய்து வருகிறோம். இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலை ரூ.1,54,999 ஆகும். Galaxy Z Fold 4 பயன்படுத்த எப்படி இருக்கு என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.

Galaxy Z Fold 4 வடிவமைப்பு

Galaxy Z Fold 4 வடிவமைப்பு

Galaxy Z Fold 4 ஆனது Galaxy Z Fold 3 மாடல் போன்றே தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பயன்பாடு மற்றும் அம்சங்கள் அடிப்படையில் போதுமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

சாம்சங் இந்த ஸ்மார்ட்போனில் கியர் அடிப்படையிலான கீலை மாற்றி இருக்கிறது.

அதாவது இந்த கீல் ஆனது ஃபோல்ட் செய்ய பயன்படுகிறது. இதன்மூலம் ஸ்மார்ட்போனை ஸ்டெப் பை ஸ்டெப் ஆக மடிக்கலாம்.

கார்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பு

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போனானது பின் பேனல் மற்றும் கவர் டிஸ்ப்ளே ஆனது கார்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது.

எனவே இந்த ஸ்மார்ட்போனுக்கு ஸ்க்ரீன் ப்ரொடக்டரோ அல்லது பாதுகாப்பு கேஸோ அத்தனை முக்கியமில்லை.

பயன்படுத்திய வரை ஸ்மார்ட்போனில் கீறல்கள் எதுவும் தென்படவில்லை. கொரில்லா க்ளாஸ் உண்மையாகவே சிறப்பாக செயல்படுகிறது.

ஐபோன்களை போன்று பிரேம்கள் தட்டையாக இல்லை. சாம்சங் ஃபோல்டபிள் போனின் ஃபிரேம்களில் ஏராளமான கிரிப்கள் இருக்கிறது.இது பிடித்துக் கொள்ள மிகவும் சௌகரியமாக இருக்கிறது.

யூஎஸ்பி போர்ட்டல் உடன் மேல் மற்றும் கீழ் புறத்தில் இரண்டு ஸ்பீக்கர் கிரில்ஸ் உள்ளது. பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன் ஆகிய இரண்டுமே கைரேகை சென்சாராக பயன்படுகிறது.

இந்த கைரேகை ஸ்கேனர் அம்சம் மிகவும் அடிப்படையாக இருக்கிறது எனவே பெரிதளவு ஈர்ப்பு எதுவும் இல்லை.

போனில் மேல் இடது மூலையில் இரட்டை நானோ சிம் கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் eSIM ஆதரவைக் கொண்டுள்ளது.

ப்ரீமியம் ஃபிளாக்ஷிப் வாட்டர் ரெசிஸ்டன்ட்

ப்ரீமியம் ஃபிளாக்ஷிப் வாட்டர் ரெசிஸ்டன்ட்

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை பொறுத்தவரை நிறைய நகரும் பாகங்கள் இதில் இருக்கும் என்பது அறிந்ததே. எனவே ஸ்மார்ட்போனில் தண்ணீர் எதிர்ப்புக்கான ஐபிஎக்ஸ் 8 மதிப்பீடு ஆதரவு இருக்கிறது.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை போன்று இதில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் ஆதரவு இல்லை. காரணம் இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவு மட்டுமே இருக்கிறது டஸ்ட் ரெசிஸ்டன்ட் ஆதரவு இல்லை.

இதன் முதன்மை காட்சி மிகவும் மென்மையாக இருக்கும் காரணத்தால் சிறிய தூசி துகள்கள் கூட காட்சியை சேதப்படுத்தும். எனவே இது சற்று குறைபாடாக பார்க்கப்படுகிறது.

ஆனால் மேம்பட்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவு இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் IPX8 மதிப்பீடு இருக்கிறது. இதன்மூலம் நீங்கள் கேலக்ஸி ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போனை தண்ணீரில் மூழ்கடித்து உலர்ந்த துணியை பயன்படுத்தி துடைக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போனின் நீர் எதிர்ப்புத் திறனை நாங்கள் விரிவாக பரிசோதிக்கவில்லை என்றாலும் தூசி உள்ளிட்டவைகளை துடைக்க சிறிது தண்ணீர் ஊற்றித் துடைத்தோம். அதில் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாகவே இருந்தது.

கவர் டிஸ்ப்ளே

கவர் டிஸ்ப்ளே

Samsung Galaxy Z Fold 4 இல் 6.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2316 x 904 (HD+) தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டுள்ளது.

இது வழக்கமான காட்சி போல் தோன்றினாலும், இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவை விட சற்று உயரமானதாக இருக்கிறது. இருப்பினும் இதில் டைப் செய்வது சற்று கடினமாக உள்ளது.

முதன்மை டிஸ்ப்ளேவை பயனர்கள் பயன்படுத்த வேண்டும் என சாம்சங் வேண்டுமென்றே ஒரு உயரமான காட்சியை பயன்படுத்தியதாக கருதப்படுகிறது.

முழு டிஸ்ப்ளேயில் நீங்கள் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் இந்த கவர் டிஸ்ப்ளேயில் செய்ய முடியும். ஏன்., கவர் டிஸ்ப்ளேயில் யூடியூப் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றைக் கூட நீங்கள் பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே திறன்

ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே திறன்

Samsung Galaxy Z Fold 4 ஆனது 2176 x 1812 (QXGA+) தெளிவுத்திறனுடன் கூடிய 7.6 இன்ச் ஃபோல்டிங் ப்ரைமரி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரெஃப்ரஷிங் ரேட்டைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே மடிக்கக்கூடிய கண்ணாடியின் மூலம் பாதுகாக்கப்படுவதோடு அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் ஸ்க்ரீன் ப்ரொடக்டர் இருக்கிறது.

இந்த காட்சி டிஸ்ப்ளே உயர்தர டேப்லெட் போன்ற அனுபவத்தை வழங்குகிறது.

ப்ரீமியம் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ப்ரீமியம் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, சாம்சங் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் அவுட் எப்போதும் நன்றாக இருக்கும்.

அதன்படி இதில் சமநிலையான டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 50 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 10 எம்பி கேமரா கவர் டிஸ்ப்ளேவிலும் மற்றும் 4 எம்பி இன்-டிஸ்ப்ளே செல்பி கேமராவாகவும் இருக்கிறது.

எனவே Galaxy Z Fold 4 இல் முழுமையாக வேலை செய்யும் ஐந்து கேமராக்கள் இருக்கிறது.

சிறந்த முதன்மை கேமரா

Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் 50MP முதன்மை கேமரா இருக்கிறது. இது ஒவ்வொரு லைட்டிங்கிற்கு ஏற்ப சிறந்த புகைப்படத்தை பதிவு செய்ய அனுமதிக்கிறது.

போர்ட்ரெய்ட் ஷாட் மற்றும் வைட் ஷாட் சென்சார் ஆகிய இரண்டும் படங்களை கூர்மையாகவும், துல்லியமாகவும் பதிவு செய்கிறது. சினிமா தர காட்சிகளை பதிவு செய்ய இந்த ஸ்மார்ட்போன் அனுமதிக்கிறது. ஒட்டுமொத்தமாக கேமரா அனுபவம் மேம்பட்டதாக இருக்கிறது.

சிப்செட் மற்றும் கேமிங் செயல்திறன்

Samsung Galaxy Z Fold 4 சிப்செட்

Samsung Galaxy Z Fold 4 ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது சமீபத்திய மற்றும் மேம்பட்ட சிப்செட் ஆகும்.

இதன்மூலம் ஸ்மார்ட்போன் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக செயல்படுகிறது. அடுத்தடுத்த பயன்பாடுகளை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் வேகமாக ஓபன் செய்து பயன்படுத்தலாம். இந்த சிப்செட் இயக்கமுறை மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

Galaxy Z Fold 4 கேமிங் செயல்திறன்

கேமிங் செயல்திறனை பொறுத்தவரை, Candy Crush Saga விளையாட்டை சோதிக்கலாம் என ஓபன் செய்தோம். ஆனால் இந்த விளையாட்டிலேயே ஒரு மணிநேரம் சென்றுவிட்டது.

காரணம் இதன் டிஸ்ப்ளே தன்மை, சிறிய டிஸ்ப்ளே போனில் கேம்கள் விளையாடி இத்தனை பெரிய டிஸ்ப்ளேயில் கேம் விளையாடும் போதும் மிகவும் ஈர்ப்பாக இருக்கிறது.

ஓஎஸ் மற்றும் பேட்டரி

ஓஎஸ் விவரங்கள்

Samsung Galaxy Z Fold 4 ஆனது ஆண்ட்ராய்டு 12L-அடிப்படையிலான OneUI 4.1.1 மூலம் இயக்கப்படுகிறது. இது சமீபத்திய ஓஎஸ் ஆகும். மேலும் தனிப்பயனாக்கப்பட்ட OneUI 4.1.1 மிகவும் பிரத்யேகமாக இருக்கிறது.

மெனு ஆப்ஷனில் தொடர்ந்து ஒவ்வொன்றும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த ஓஎஸ் இரட்டை டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை தடையின்றி செயல்படுத்த உதவுகிறது.

சிறந்த மென்பொருள் அனுபவத்தை இது வழங்குகிறது. ஐந்து வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என சாம்சங் உறுதியளித்திருக்கிறது.

பேட்டரி ஆயுள்

Samsung Galaxy ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனானது 4,400 mAh பேட்டரியை கொண்டுள்ளது. போனில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் உள்ளன, அதுவும் 7.6-இன்ச் பிரைமரி டிஸ்ப்ளே இருப்பதால், பேட்டரி ஆயுள் என்பது மிக முக்கியம்.

ஐந்து மணிநேரத்திற்கு மேல் ஸ்கிரீன்-ஆன்-டைம் உட்பட மிதமான பயன்பாட்டில் ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுள் ஒரு நாள் முழுவதும் நீடித்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஸ்மார்ட்போன் வேகமான வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இருப்பினும், சார்ஜிங் வேகம் OnePlus அல்லது Xiaomi இன் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போன்களைப் போல வேகமாக இல்லை.

பெரும்பாலான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை போலவே, Galaxy Z Fold 4 உடன் நீங்கள் சார்ஜரைப் பெற மாட்டீர்கள். தனியாகவே வாங்க வேண்டும்.

வாங்கலாமா., வேண்டாமா?

வாங்கலாமா., வேண்டாமா?

Samsung Galaxy Z Fold 4 உலகின் Optimus Prime ஸ்மார்ட்போன் ஆகும். ஃபோல்டபிள் மற்றும் ப்ரீமியம் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.

விலை மட்டும் அதிகம் ஆனால் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் உடன் ஒப்பிடும் போது இது அவ்வளவு அதிகமாக இல்லை.

சிறந்த ஃப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 4 Review: Is it Worth to Buy?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X