இது ஸ்மார்ட்போனா இல்ல கம்ப்யூட்டரா? பூரிப்படைய வைத்த Samsung Fold 4!

|

சமீபத்தில் அறிமுகமாகி சந்தையை கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் தான் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4. இந்த ஸ்மார்ட்போன் அதீத விலைப் பிரிவில் அறிமுகமானாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் Galaxy Z Flip 4 உடன் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனானது நல்ல எண்ணிக்கையிலான முன்கூட்டிய ஆர்டர்களை பெற்று வருகிறது.

Galaxy Z Fold 4 இயக்க தோற்றம்

Galaxy Z Fold 4 இயக்க தோற்றம்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள சந்தைகளில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

Galaxy Z Fold 4 ஆனது ஆண்ட்ராய்டு 12L மூலம் இயங்குகிறது.Mark Spurrel என்ற யூடியூபர் மூலம் வெளியான தகவலில், Galaxy Z Fold 4 ஆனது Windows 10 OS பதிப்பு இயக்க ஆதரவு போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இரண்டு லாஞ்சர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்தும் பட்சத்தில் ஸ்மார்ட்போன் விண்டோஸ் ஓஎஸ் போன்று காட்சியளிக்கிறது. இது நேரடியான இயக்க ஆதரவு அல்ல, ஆனால் Windows 10 OS இயங்கும் ஸ்மார்ட்போன் போல் தோற்றமளிக்கிறது.

டெஸ்க்டாப் OS போன்ற தோற்ற மெனு

டெஸ்க்டாப் OS போன்ற தோற்ற மெனு

Galaxy Z Fold 4 இன் கவர் டிஸ்ப்ளே காட்சியானது Windows 10 OS இல் இயங்கும் ஸ்மார்ட்போனை போல் தோற்றமளிக்கிறது.

டெஸ்க்டாப் OS போன்ற UI தொடக்க மெனு ஆப்ஷன் இதில் இருக்கிறது. மெனு மட்டுமின்றி முழுமையாக வேலை செய்யும் காலண்டர் மற்றும் விரைவான செட்டிங்ஸ் மெனுவைக் கொண்டிருக்கிறது.

ட்ரூ விண்டோஸ் ஓஎஸ்

ட்ரூ விண்டோஸ் ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது. ஆனால் ட்ரூ விண்டோஸ் ஓஎஸ் போன்று காட்சியளிக்கிறது.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் என்பது பிரதான பயன்பாடு என்றாலும் UI என்பது ஒவ்வொரு நிறுவனமும் அதை தனிப்பயனாக்கி உருவாக்கக்கூடியது என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் ஓஎஸ் தோற்றத்தை பெற இரண்டு வெவ்வேறு லாஞ்சர்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த அமைப்பு நிலையானது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நுணுக்கமாக உருவாக்கப்படும் பயன்பாடுகள்

நுணுக்கமாக உருவாக்கப்படும் பயன்பாடுகள்

ஆண்ட்ராய்டு ஓஎஸ் பயன்பாட்டை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தனிப்பயனாக்குவதன் மூலம் எந்த அளவு நுணுக்கமாக செயல்படுகின்றன என்பது சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

அது எந்த லாஞ்சர் என்று கேள்வி வருகிறதா? கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போனில் விண்டோஸ் 10 போன்ற UI வழங்கும் வின்-எக்ஸ் லாஞ்சரை பயன்படுத்தினால் இந்த டிஸ்ப்ளே விண்டோஸ் ஓஎஸ் போன்ற ஸ்கொயர் ஹோம் காட்சியை வழங்குகிறது.

Galaxy Z Fold 4 சிறப்பம்சங்கள்

Galaxy Z Fold 4 சிறப்பம்சங்கள்

சாம்சங்கின் முந்தைய ஃபோல்ட் மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் புதிய Galaxy Z Fold 4 மாடலை சாம்சங் அறிமுகம் செய்தது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது இந்திய விலை மதிப்பின்படி ரூ.1,42,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி என்கிற மூன்று வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

கேமரா விவரங்கள்

கேமரா விவரங்கள்

இதன் கேமரா விவரங்கள் குறித்து பார்க்கையில், சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் மொத்தம் 5 கேமராக்கள் இருக்கிறது.

கவர் டிஸ்ப்ளேவில் ஒன்று, அண்டர் ஸ்க்ரீனில் ஒன்று மற்றும் மீதமுள்ள மூன்று கேமராக்கள் ரியர் பேனலில் இருக்கிறது.

50 மெகாபிக்சல் மெயின் சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இருக்கிறது.

அதேபோல் மெயின் டிஸ்ப்ளேவின் கீழ் 4 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்பி சென்சார் இருக்கிறது. அனைத்து கேமராக்களும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.

இசட் ஃபோல்ட் 4 டிஸ்ப்ளே விவரங்கள்

இசட் ஃபோல்ட் 4 டிஸ்ப்ளே விவரங்கள்

சாம்சங் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் 7.6 இன்ச் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் மெயின் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

கவர் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில், இதில் 6.2-இன்ச் HD+ (904x2,316 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே இருக்கிறது.

சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

4,400mAh டூயல் பேட்டரி

4,400mAh டூயல் பேட்டரி

4,400mAh டூயல் பேட்டரி பேக் வசதியைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கான 25W சாம்சங் சார்ஜர் ஆனது பாக்ஸ் உடன் அனுப்பப்படாது, தனியாகவே விற்கப்படும் எனபது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 4 Display Options Look like Windows 10 OS

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X