Home
Mobile

வேற லெவல் டிசைனுடன் வெளிவர தயாராகும் Samsung Galaxy Z Fold 3 Ultra.. இதில் அண்டர் டிஸ்பிளே கேமரா இருக்கா?

Samsung நிறுவனத்தின் அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3 அல்ட்ரா (Samsung Galaxy Z Fold 3 Ultra) என்ற போல்டப்பில் ஸ்மார்ட்போனின் கான்செப்ட் ரெண்டர் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

Samsung Galaxy Z Fold 3 Ultra டிஸ்பிளே விபரம்

Samsung Galaxy Z Fold 3 Ultra டிஸ்பிளே விபரம்

வெளியான Samsung Galaxy Z Fold 3 Ultra போனின் ரெண்டர் தகவல்கள் ஸ்மார்ட்போனின் முன்பக்க மற்றும் பின்பக்க விபரங்கள் இரண்டையும் காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் சில காலமாக இணையத்தில் கசிந்துகொண்டிருக்கிறது. இப்போது, இந்த சாதனம் 7' இன்ச் இன்டெர்னல் டிஸ்பிளே மற்றும் 4' இன்ச் கொண்ட எக்ஸ்டர்னல் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்செப்ட் டிசைன்

கான்செப்ட் டிசைன்

சாம்சங் கேலக்ஸி போல்ட் 3 இல் குறைந்த வெப்பநிலை பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (LTPO) மெல்லிய-பிலிம் டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு அண்டர் டிஸ்பிளே கேமராவும் இருக்கக்கூடும் என்றும் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. கான்செப்ட் டிசைனர் பற்றிய இந்த தகவலை பென் கெஸ்கின் தனது டிவிட்டர் பக்கத்தில் வழியாக வெளியிட்டுள்ளார்.

108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா

108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் காணப்படும் குவாட் ரியர் கேமரா அமைப்பை போன்ற ஒரு கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3 கொண்டிருக்கும் சென்சார்கள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா 108 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை என்னவாக இருக்கும்?

விலை என்னவாக இருக்கும்?

அதேபோல், ஒரு சமீபத்திய அறிக்கை இந்த புதிய போல்டப்பில் ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது. ரெண்டர் தகவல்கள் Samsung Galaxy Z Fold 3 Ultra போனின் எஸ் பென் ஸ்டைலஸையும் காட்டுகின்றது. ஜூன் 2021 இல் அறிமுகப்படுத்தப்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 2 மாடலை விட எடை குறைவாக இருக்கும் என்றும், இதன் விலை போல்ட் 2 வெர்ஷனுக்கு சமமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 3 Ultra Concept Render Tips Leaked : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X