பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.8,000 ஆஃபரில் Samsung ஃபிளிப் போன்.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபிளிப் மாடலை நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு வாங்க விரும்பினால், பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் தள்ளுபடியை பயன்படுத்தலாம். சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்8 (Samsung Galaxy Z Flip8) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. விலை, பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,24,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.8,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,16,999 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்8 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மேலும், கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும்.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்8 அம்சங்கள் (Samsung Galaxy Z Flip8 Specifications): 6.9 இன்ச் (2520 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 4.1 இன்ச் (1048 x 948 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) கவர் டிஸ்பிளே கிடைக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 342 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் ஒன் யுஐ 9 (One UI 9) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெகா கோர் எக்ஸினோஸ் 2600 3என்எம் (Deca Core Exynos 2600 2nm) சிப்செட் மற்றும் எக்ஸ்கிளிப்ஸ் 960 ஜிபியு (Xclipse 960 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஈசிம் + நானோ சிம் சப்போர்ட் உள்ளது.
ப்ரோவிஷூவல் என்ஜின் (ProVisual Engine), ஃப்ளெக்ஸ் மோட் (Flex Mode), ஃபிளிப் ஷாட் (FlipShot), மிரர் வியூ (Mirror View) உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera Systm) கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்8 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 10 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4300mAh பேட்டரி கிடைக்கிறது. 15W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP48 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்8 கிடைக்கிறது.
ஃபிளிப் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு இருக்கிறது. போல்டு செய்தால் 13.1 எம்எம் தடிமன் வருகிறது. அன்போல்டு செய்தால் 6.1 எம்எம் தடிமன் மட்டுமே இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்8 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
மொத்தமாக 180 கிராம் எடை கொடுத்துள்ளது. 5ஜி, 4ஜி கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS) மற்றும் வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டிகளை இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்8 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. பிங்க், கிரீம் மற்றும் கிராபைட் ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
