Galaxy Z Flip7 அறிமுகம்.. 4.1 இன்ச் AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 4300mAh பேட்டரி.. இது வேற ரகம்!
ஒட்டுமொத்த ஃபிளிப் போன் பிரியர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்யும்படியான டிசைன் மற்றும் பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 (Samsung Galaxy Z Flip7) போன் களமிறங்கி இருக்கிறது. கேலக்ஸி இசட் சீரிஸ் மாடல்களிலேயே பெரிய கவர் டிஸ்பிளேவை (ஃப்ளெக்ஸ்விண்டோ) இது கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நியூயார்க் நகரின் புரூக்ளினில் நடைபெற்ற சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 (Samsung Galaxy Unpacked 2025) நிகழ்வில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு7, கேலக்ஸி இசட் ஃபிளிப்7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எஸ்இ ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகின. இதில் ஃப்ளெக்ஸ்விண்டோ டிஸ்பிளே கொடுக்கும் இசட் ஃபிளிப்7 மாடலானது, ஒட்டுமொத்த கவனத்தை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 அம்சங்கள் (Samsung Galaxy Z Flip7 Specifications):
6.9 இன்ச் (2520 x 1080 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கேமரா ஹோல், ரவுண்டெட் கார்னருடன் 4.1 இன்ச் (1048 x 948 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) கவர் டிஸ்பிளே உள்ளது.
இந்த ஃப்ளெக்ஸ்விண்டோ (FlexWindow) ஆனது, இசட் சீரிஸ் மாடல்களில் அதிக பிரைட்னஸ் மற்றும் பெரிய சைஸ் கொண்டிருக்கிறது. இதிலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பேக் மற்றும் கவர் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

* ஜெமினி லைவ் (Gemini Live)
* நவ் பார் (Now Bar)
* நவ் ப்ரீஃப் (Now Brief)
ஃபிளெக்ஸ் விண்டோவில் ஜெமினி லைவ் (Gemini Live on FlexWindow):
இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 போனின் மெயின் டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஃபிளெக்ஸ்விண்டோவிலும் ஜெமினி லைவ் (Gemini Live) பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, பர்சனல் அசிஸ்டன்ட் ஆனது ஃபிளிப் செய்யப்பட்டிருந்தாலும், அணுக கிடைக்கும். அவுட்டோருக்கு ஏற்ப விஷன் பூஸ்டர் (Vision Booster) என்ஹான்ஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜெமினி லைவ் மட்டுமல்லாமல், ரியல் டைமில் ஆப் ஆக்டிவிட்டிகளை தெரிந்து கொள்ள நவ் பார் பீச்சர் கிடைக்கிறது. அதேபோல டிராபிக், காலண்டர், இவெண்ட், சாம்சங் ஹெல்த் மற்றும் கேலக்ஸி வாட்ச் போன்றவற்றின் அப்டேட்களை தெரிந்து கொள்ள நவ் ப்ரீஃப் பீச்சரும் கிடைக்கிறது. அதேபோல கேலக்ஸி ஏஐ பீச்சர்களும் (Galaxy AI) பீச்சர்களும் கிடைக்கின்றன.

நைட் போட்டோகிராபி கேமரா (Enhanced Nightography Camera):
இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 போனில் 50 எம்பி வைடு மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கிடைக்கிறது. இந்த கேமராவில் என்ஹான்ஸ்டு நைட் போட்டோகிராபி (Enhanced Nightography), ரியல் டைம் ஃபில்டர் (Real-Time Filters), ஜூம் ஸ்லைடர் (Zoom Slider), போர்ட்ராய்டு ஸ்டூடியோ (Portrait Studio), போட்டோ அசிஸ்ட் (Photo Assist) கிடைக்கிறது.
10 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் எக்ஸினோஸ் 2500 (Exynos 2500) சிப்செட் கிடைக்கிறது. IP48 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4,300mAh பேட்டரி கிடைக்கிறது. 6 மாதங்களுக்கான கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) இலவமாக வருகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 விலை (Samsung Galaxy Z Flip7 Price):
இந்த போனின் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.94,183ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,04,469ஆகவும் இருக்கிறது. இது அமெரிக்கா டாலர் அடிப்படையிலான விலையாகும். இன்று ப்ரீ-ஆர்டர் தொடங்குகிறது. ஜூலை 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ப்ளூ ஷேடோ, ஜேட்பிளாக் மற்றும் கோரல் ரெட் மற்றும் மின்ட் கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








