Home
Mobile

Galaxy Z Flip7 FE அறிமுகம்! ஆண்ட்ராய்டு 16 OS.. AMOLED டிஸ்பிளே.. 4000mAh பேட்டரி.. OIS கேமரா.. IP48 ரேட்டிங்!

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மட்டுமல்லாமல், ஆர்மர் அலுமியம் பாடி, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன், IP48 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், 3.4 இன்ச் சூப்பர் அமோலெட் கவர் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ (Samsung Galaxy Z Flip7 FE) போன் வெளியாகி இருக்கிறது. கேலக்ஸி போல்டு7 மற்றும் கேலக்ஸி ஃபிளிப்7 மாடல்களைவிட கம்மியான பட்ஜெட்டில் கிடைக்க இருக்கும் இந்த எப்இ மாடலின் முழு பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

சாம்சங் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 (Samsung Galaxy Unpacked 2025) நிகழ்வானது, நியூயார்க் நகரின் புரூக்ளினில் நடைபெற்றது. இதில் கேலக்ஸி இசட்7 சீரிஸ் மாடல்களியே கம்மியான விலைக்கு பக்கா பீச்சர்களுடன் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Galaxy Z Flip7 FE அறிமுகம்! ஆண்ட்ராய்டு 16 OS.. AMOLED டிஸ்பிளே வருது!

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy Z Flip7 FE Specifications):
இந்த சாம்சங் கேலக்ஸி மாடலில் ஒன் யுஐ 8 (One UI 8) கொண்ட என்ஸினோஸ் 2400 (Exynos 2400) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (2640 x 1080 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதேபோல ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பிரைட்னஸ் 3.4 இன்ச் (720 x 748 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) கவர் டிஸ்பிளே வருகிறது.

Galaxy Z Flip7 FE அறிமுகம்! ஆண்ட்ராய்டு 16 OS.. AMOLED டிஸ்பிளே வருது!

25W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 (Fast Wireless Charging 2.0), வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) கொண்ட 4,000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 187 கிராம் எடை வருகிறது. போல்டு செய்யப்பட்ட பிறகு 14.9 எம்எம் தடிமன் வருகிறது. அன்போல்டு செய்தால், வெறும் 6.9 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ போனில் 10 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. டூயல் ரியர் செட்டப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. டூயல் பிக்சல் ஆட்டோ போகஸ் (Dual Pixel AF) கிடைக்கிறது. ரியல் டைம் ஃபில்டர்கள் வருகின்றன.

Galaxy Z Flip7 FE அறிமுகம்! ஆண்ட்ராய்டு 16 OS.. AMOLED டிஸ்பிளே வருது!

பிரீமியம் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) மற்றும் ஆர்மர் அலுமியம் பாடி கிடைக்கிறது. பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனை வாங்குவோருக்கு 6 மாதங்களுக்கான கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) மற்றும் 2 டிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் இலவமாக கொடுக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ விலை (Samsung Galaxy Z Flip7 FE Price): இந்த சாம்சங்கின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.77,052ஆகவும் (899 அமெரிக்க டாலர்கள்) மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.82,279ஆகவும் (959 அமெரிக்க டாலர்கள்) இருக்கிறது. இதில் 256 ஜிபி மாடல் மட்டும் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது.

அறிமுக சலுகையாக 60 அமெரிக்கா டாலர்கள் கம்மியாக கிடைக்கிறது. ஆகவே, 899 அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.77,052 இந்திய மதிப்பில்) ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். ஜூலை 25ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. மேற்கண்ட விலை யுஎஸ் மார்கெட்டின் விலைகளாகும். இந்திய மார்கெட் விலைகளை அடுத்து அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip7 With 50MP Camera 8GB RAM Launched Sale From July 25 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X