Home
Mobile

விஸ்வரூப ப்ரீ-ஆர்டர்.. 48 மணி நேரம்.. 2,10,000 ஆர்டர்.. SAMSUNG கேலக்ஸி இசட் ஃபிளிப்7, ஃபோல்டு7.. விலை எப்படி?

இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 (Samsung Galaxy Z Flip7), சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ (Samsung Galaxy Z Flip7 FE) மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு7 (Samsung Galaxy Z Fold7) ஆகிய மாடல்கள் ப்ரீ-ஆர்டருக்கு வந்த 48 மணி நேரத்தில் 2,10,000 ஆர்டர்களை எட்டி இருக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி இசட்7 மாடல்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை 9ஆம் தேதி இந்த மாடல்கள் இந்தியாவில் வெளியாகின. அந்த தேதியிலேயே அறிமுக சலுகைகளுடன் ப்ரீ-ஆர்டரும் தொடங்கப்பட்டது. இப்போது, இந்த ப்ரீ-ஆர்டர் விவரங்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ப்ரீ-ஆர்டர் தொடங்கிய 48 மணி நேரத்துக்கும் ஒட்டுமொத்தமாக 2,10,000 ஆர்டர்களை சாம்சங் பிரியர்கள் செய்துள்ளனர்.

விஸ்வரூப ப்ரீ-ஆர்டர்.. 48 மணி நேரம்.. 2,10,000 ஆர்டர்.. SAMSUNG மாடல்!

இதில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ மாடல்களின் விற்பனை ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு7 மாடலின் விற்பனை ஜூலை 21ஆம் தேதி தொடங்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon), சாம்சங் (Samsung) தளங்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு7 விலை (Samsung Galaxy Z Fold7 Price): இந்த ஃபோல்டு போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.1,74,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.1,86,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.2,16,999ஆகவும் இருக்கிறது. .

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 விலை (Samsung Galaxy Z Flip7 Price): இந்த ஃபிளிப் போனின் 12 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.1,09,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.1,21,999ஆகவும் இருக்கிறது. ப்ளூ ஷேடோ, கோரல் ரெட் மற்றும் ஜேட்பிளாக் ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

விஸ்வரூப ப்ரீ-ஆர்டர்.. 48 மணி நேரம்.. 2,10,000 ஆர்டர்.. SAMSUNG மாடல்!

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ விலை (Samsung Galaxy Z Flip7 FE Price): இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.89,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.95,999ஆகவும் இருக்கிறது. இதில் 256 ஜிபி மாடல் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. பிளாக், ஒயிட் கலரில் வருகிறது.

இவ்வளவு பிரீமியமான விலைக்கு வெளியாகியும், 48 மணி நேரத்தில் 2,10,000 ஆர்டர்கள் வந்திருப்பது. சாம்சங் நிறுவனத்தின் ஃபிளிப் மற்றும் ஃபோல்டு மாடல்களுக்கு இந்தியாவில் இருக்கும் வரவேற்பை காட்டுகிறது. இன்னும் விற்பனை தொடங்கிய பிறகு இது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அறிமுக சலுகை அதிகமாக கிடைப்பதால், இவ்வளவு வரவேற்பு பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் மற்றொரு புதிய மாடல் இன்று வெளியாகியது. சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி என்னும் பட்ஜெட் மாடலாகும். இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.17,499ஆக இருக்கிறது. ஜூலை 29ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. பேங்க் தள்ளுபடி போக ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip7 Series and Z Fold7 Hit 210000 Pre-Orders in 48 Hours in India Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X