பொளந்து கட்டிய அமேசான்.. முழுசா ரூ.12000 டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 4400mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 (Galaxy Z Flip7) மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்டு7 (Galaxy Z Fold7) ஆகிய மாடல்களின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆரம்பமே ரூ.12,000 தள்ளுபடி போக கிடைப்பதால், இந்தியாவில் இருக்கும் சாம்சங் பிரியர்கள் குஷியில் இருக்கின்றனர். இந்த மாடல்களுக்கான இந்திய விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 விலை (Samsung Galaxy Z Flip7 Price): இந்த ஃபிளப்7 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.6,000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,03,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். குறிப்பிட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.3,119 தள்ளுபடி கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு7 விலை (Samsung Galaxy Z Fold7 Price): இந்த ஃபோல்டு7 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,74,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் நேரடியாக ரூ.12,000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த மாடலுக்கும் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.4,889 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 அம்சங்கள் (Samsung Galaxy Z Flip7 Specifications): 6.9 இன்ச் (2520 x 1080 பிக்சல்கள்) மெயின் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 4.1 இன்ச் (1048 x 948 பிக்சல்கள்) கவர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. டெகா கோர் எக்ஸினோஸ் 2500 3என்எம் (Deca Core Exynos 2500 3nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு ஒன் யுஐ 8 கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த போனுக்கு IP48 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 4,300mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. பிரீமியம் ஃபிளிப் மாடலாக இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு7 அம்சங்கள் (Samsung Galaxy Z Fold7 Specifications): 8 இன்ச் (2184 x 1968 பிக்சல்கள்) இன்னர் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 6.5 இன்ச் (2520 x 1080 பிக்சல்கள்) அவுட்டர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. ஆண்ட்ராய்டு 16 (Android 16) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் உள்ளது.

200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 10 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 30X ஸ்பேஸ் ஜூம், ஓஐஎஸ் டெக்னாலஜி உள்ளது. 4400mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 4.5W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது. IP48 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ விலை (Samsung Galaxy Z Flip7 FE Price): இந்த ஃபிளிப்7 எப்இ போனின் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.89,999ஆக இருக்கிறது. இதற்கு கூப்பன் டிஸ்கவுண்ட் கிடையாது. ரூ,2,699 மதிப்பில் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் மட்டுமே கிடைக்கிறது. மூன்று மாடல்களுக்கும் ரூ.55,050 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








