Home
Mobile

அடிச்சான் பாருங்க.. ரூ.10,000 ஆஃபரில் Flip போன்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. eSIM சப்போர்ட்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபிளிப்8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகிவிட்டது. ப்ரீ-ஆர்டரில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால், முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ (Samsung Galaxy Z Flip7 FE) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.95,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.85,999 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

அடிச்சான் பாருங்க.. ரூ.10,000 ஆஃபரில் Flip போன்.. AMOLED டிஸ்பிளே!

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy Z Flip7 FE Specifications): 6.7 இன்ச் (2640 x 1080 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 425 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 3.4 இன்ச் (720 x 748 பிக்சல்கள்) கவர் டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 306 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெகா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400 (Deca Core Samsung Exynos 2400) சிப்செட்டை இந்த கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ கொடுத்துள்ளது.

எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. ஈசிம் (eSIM) மற்றும் நானோ சிம் (Nano SIM) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8 (One UI 8) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 10 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (Reverse Wireless Charging) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் போல்டு செய்தால் 14.9 எம்எம் தடிமன் மற்றும் அல்போல்டு செய்தால் வெறும் 6.9 எம்எம் தடிமன் மட்டுமே கொடுக்கிறது. லைட் வெயிட்டில் 187 கிராம் எடை மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது.

IP48 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ ஸ்மார்ட்போன் வருகிறது. யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. ஒயிட் மற்றும் பிளாக் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip7 FE With 8GB RAM Available At Rs 10000 Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X