சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 சீரிஸ்.. இந்திய விலை நிர்ணயம்.. விற்பனை தேதி.. ப்ரீ-ஆர்டர் சலுகை.. முழு விவரம்!
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 (Samsung Galaxy Z Flip7 FE) மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ (Samsung Galaxy Z Flip7 FE) ஆகிய மாடல்கள் வெளியாகிவிட்டன. நம்ப முடியாத அறிமுக சலுகையுடன் ப்ரீ-ஆர்டருக்கும் கிடைக்கின்றன. இந்த மாடல்களின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதேபோல விற்பனை தேதி, ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கும் சலுகை விவரங்களையும் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 எப்இ விலை (Samsung Galaxy Z Flip7 FE Price): இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.89,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.95,999ஆகவும் இருக்கிறது. இப்போது, 256 ஜிபி வேரியண்ட் மட்டும் அறிமுக சலுகையுடன் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது.

ஆகவே, இந்த வேரியண்ட்டை ரூ.89,999 பட்ஜெட்டில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். ஜூலை 12ஆம் தேதி வரையில் ப்ரீ-ஆர்ட் செய்தால் மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கும். இந்திய மார்கெட்டில் ஜூலை 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதற்கு பிறகு ரூ.95,999 பட்ஜெட்டில் மட்டுமே 256 ஜிபி வேரியண்ட் கிடைக்கும். 128 ஜிபி வேரியண்ட்டானது ரூ.89,999 பட்ஜெட்டில் கிடைக்கும்.
பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) மற்றும் சாம்சங்.காம் (Samsung.com) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.45,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. நோ-காஸ்ட் ஈஎம்ஐ வருகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 விலை (Samsung Galaxy Z Flip7 Price): இந்த கேலக்ஸி போனில் 12 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,21,999ஆகவும் இருக்கிறது. முந்தைய மாடலை போலவே அறிமுக சலுகையுடன் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது.
ஜூலை 12ஆம் தேதிக்குள் ப்ரீ-ஆர்டர் செய்தால், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலைக்கு 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். ரூ.1,09,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய முடியும். இதற்கு இசட் ஃபிளிப்7 மாடலுக்கு ரூ.55,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் வேல்யூ கிடைக்கிறது. அதேபோல நோ-காஸ்ட் ஈஎம்ஐ வருகிறது. ஜூலை 22ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 போனில் ப்ளூ (Blue Shadow), ஜேட்பிளாக் (Jetblack), கோரல்ரெட் (Coralred) மற்றும் மின்ட் (Mint) என்னும் ஸ்பெஷல் கலரும் கிடைக்க இருக்கிறது. நியூயார்க் நகரில் நடைபெற்ற சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் இந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றுடன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு7 (Samsung Galaxy Z Fold7) மாடலும் வெளியானது.
அதேபோல சாம்சங் கேலக்ஸி வாட்ச்8 (Samsung Galaxy Watch8) மற்றும் சாம்சங் கேலக்ஸி வாட்ச்8 கிளாசிக் (Samsung Galaxy Watch8 Classic) ஆகிய மாடல்களும் வெளியாகின. இதில் வாட்ச்8 மாடலின் ஆரம்ப விலை ரூ.32,999ஆகவும், வாட்ச்8 கிளாசிக் மாடலின் ஆரம்ப விலை ரூ.46,999ஆகவும் இருக்கிறது. போல்டு7 மாடலின் ஆரம்ப விலை ரூ.1,74,999ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








