Home
Mobile

கனவுல வராத ஆஃபர்.. ரூ.40,501 ரேட் கட்.. OIS கேமரா.. 12GB ரேம்.. 4000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?

கேலக்ஸி அன்பேக்டு இவென்ட் (ஜூலை 2025) ஆனது ஜூலை 9ஆம் தேதி நடக்கிறது. இந்த இவென்ட்டில் கேலக்ஸி இசட் போல்டு7 (Galaxy Z Fold7), கேலக்ஸி இசட் ஃபிளிப்7 (Galaxy Z Flip7), கேலக்ஸி வாட்ச் 8 சீரிஸ் (Galaxy Watch 8 Series) வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால், முந்தைய வேரியண்ட்களின் விலை சரமாரியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்6 5ஜி போனானது நம்ப முடியாத விலை குறைப்பில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்6 5ஜி விலை (Samsung Galaxy Z Flip6 5G Price): இந்த சாம்சங் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.1,09,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.121,999ஆகவும் இருந்தது. இந்த விலைகளானது, கடந்தாண்டு ஜூலை 10ஆம் தேதி இந்தியாவில் இவை வெளியானபோது நிர்ணயிக்கப்பட்டவை ஆகும்.

கனவுல வராத ஆஃபர்.. ரூ.40,501 ரேட் கட்.. OIS கேமரா.. 12GB ரேம்.. மாடல்?

ஆனால், வரும் ஜூலை 9ஆம் தேதி நடக்கும் சாம்சங் அன்பேக்டு இவென்ட்டில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 5ஜி வெளியாக இருப்பதால், அதிகப்படியான விலை குறைப்பு கிடைக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,498ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.74,980ஆகவும் இருக்கிறது.

ஆகவே, 256 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு ரூ.40,501 மற்றும் 512 ஜிபி வேரியண்ட்டுக்கு ரூ.47,019 விலை குறைப்பு கிடைக்கிறது. இந்த விலை எப்போது வேண்டுமானாலும் மாறும். ஆகவே, இப்போதைக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட்டில் வாங்கி கொள்ளலாம். ப்ளூ (Blue), மின்ட் (Mint) மற்றும் சில்வர் ஷேடோ (Silver Shadow) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

கனவுல வராத ஆஃபர்.. ரூ.40,501 ரேட் கட்.. OIS கேமரா.. 12GB ரேம்.. மாடல்?

இந்த ஃபிளிப் போனில் லேட்டஸ்ட் ஓஎஸ் கிடைக்காது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன் யுஐ 6.1.1 (One UI 6.1.1) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களை சாம்சங் நிறுவனம் கொடுக்க இருக்கிறது. ஆகவே, ஓஸ் அப்டேட்டில் பெரிய டிராவ்பேக் கிடையாது. மற்ற பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்6 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy Z Flip6 5G Specifications): இந்த சாம்சங் போனில் 6.7 இன்ச் அமோலெட் (மெயின்) டிஸ்பிளே கிடைக்கிறது. 3.4 இன்ச் அமோலெட் (கவர்) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த கவர் டிஸ்பிளேவுக்கு மட்டும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது.

அல்ட்ரா பிரீமியம் மாடலாக இருப்பதால், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஈசிம் மற்றும் நானோ சிம் சப்போர்ட் வருகிறது. இந்த ஃபிளிப் மாடலில் 50 எம்பி வைடு மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 10 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஃபிளிப் மாடலாக இருப்பதால், 4000mAh பேட்டரி மட்டுமே வருகிறது. இதில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W கியூஐ சார்ஜிங் கிடைக்கிறது. வயர்லெஸ் பவர் ஷேரிங் உள்ளது. IP48 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip6 5G Gets Discount in India Ahead Of Galaxy Z Flip7 Launch Check Specs Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X