Home
Mobile

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்கத் துவங்கியுள்ளது. முன்னதாக இதே அப்டேட் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி நோட் 10 சீரிஸ் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.0 சார்ந்த அம்சங்களை கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு வழங்குகிறது. அதாவது இதில் மேம்பட்ட யுஐ டிசைன், சிறப்பான அனிமேஷன், சாட் பபிள்கள், மேம்பட்ட ஸ்டாக் ஆப், லாக் ஸ்கிரீன் விட்ஜெட்கள், மேம்பட்ட செக்யூரிட்டி மற்றும் செயல்திறன் போன்றவை கிடைக்கிறது.

மேலும் இதனுடன் புதிய பிரைவசதி கண்ட்ரோல்கள், ஒன்-டைம் ப்ரமிஷன்கள், மேம்பட்ட டிஜிட்டல் வெல்பீயிங் அம்சங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. பின்பு பிரீமியம் ஸ்மார்ட்போன் மட்டுமினறி ஒன்யுஐ 3.0 அப்டேட் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி எம்31 மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் இரண்டு டிஸ்பிளே உள்ளது, அதன்படி இந்த சாதனத்தின் வெளிப்புறம் 1.06-இன்ச் AMOLED டிஸ்பிளே (300x116பிக்சல்) மற்றும் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு இடம்பெற்றுள்ளது. பின்பு முழுமையாக 6.7-இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளே (2636x1080பிக்சல்) இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 21:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில்FHD + ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனில் 10எம்பி (f/2.4) செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா பற்றி பேசுகையில், 12எம்பி பிரைமரி லென்ஸ்+12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது, மேலும் இதில் எச்டிஆர்10பிளஸ் ஆதரவு, 4கே யுஎச்டி ஆதரவு, ஏஐ தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் 3300எம்ஏஎச் இரட்டை பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 18வாட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவருவதால் கண்டிப்பாக பயன்படுத்துவதற்கும் அருமையாக இருக்கும், சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

இந்த சாதனத்தில் 4ஜி எல்டிஇ ஆதரவு,புளூடூத் 5.0, இ-சிம் வசதி, யுஎஸ்பி டைப்-சி வசதி, வைஃபை 802.11a/b/g/n/ac, ஸ்மார்ட் வியூ,ஜி.பி.எஸ். க்ளோனாஸ், பீடோ, கலிலியோ உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் மற்ற சாதனங்களை விட இந்த சாதனம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் ஸ்னாப்டிராகன் 855பிளஸ் 7என்எம் பிராசஸர், குவால்காம் ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மிரர் பிளாக், மிரர் பர்பில் மற்றும் மிரர் கோல்ட் போன்ற நிறங்களில் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip Starts Receiving Android 11 Update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X