Samsung Galaxy Z Flip: பிப்ரவரி 21: இந்தியாவில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்

|

சாம்சங் நிறுவனம் அமெரிக்காவில் தனது கேலக்ஸி இசட் பிளிப் (Galaxy Z Flip) மாடலை சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிப்ரவரி 21-ம் தேதி

பிப்ரவரி 21-ம் தேதி

இந்நிலையில் கேலக்ஸி இசட் பிளிப் மாடல் ஆனது வரும் பிப்ரவரி 26-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த சாதனத்தின் முன்பதிவு இந்தியாவில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனம் ரூ.1,09,999-விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் இரண்டு டிஸ்பிளே உள்ளது, அதன்படி இந்த சாதனத்தின் வெளிப்புறம் 1.06-இன்ச் AMOLED டிஸ்பிளே (300x116பிக்சல்) மற்றும் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு இடம்பெற்றுள்ளது. பின்பு முழுமையாக 6.7-இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளே (2636x1080பிக்சல்) இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 21:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் FHD + ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடந்த மாணவர்-மின்னல் வேகத்தில் வந்த ரயில்:ஒரு விநாடிதான்!ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடந்த மாணவர்-மின்னல் வேகத்தில் வந்த ரயில்:ஒரு விநாடிதான்!

  கேமரா வசதி

கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனில் 10எம்பி (f/2.4) செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா பற்றி பேசுகையில், 12எம்பி பிரைமரி லென்ஸ்+12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது, மேலும் இதில் எச்டிஆர்10பிளஸ் ஆதரவு, 4கே யுஎச்டி ஆதரவு, ஏஐ தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். குறிப்பாக மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது மடித்து விரிவாக்குவதற்கு மென்மையான அனுபவத்தை உறுதி செய்கிறது.

எதிர்பார்க்கப்பட்ட பேட்டரி வசதி

எதிர்பார்க்கப்பட்ட பேட்டரி வசதி

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் 3300எம்ஏஎச் இரட்டை பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 18வாட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவருவதால் கண்டிப்பாக பயன்படுத்துவதற்கும் அருமையாக இருக்கும்,சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

நிறங்கள்

நிறங்கள்

மிரர் பிளாக், மிரர் பர்பில் மற்றும் மிரர் கோல்ட் போன்ற நிறங்களில் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் மற்ற நாடுகளில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டால் நிறங்கள் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் இல்லையேல் Ctrl + C மற்றும் Ctrl + V இல்லை.! லாரி டெஸ்லர் காலமானர்.!நீங்கள் இல்லையேல் Ctrl + C மற்றும் Ctrl + V இல்லை.! லாரி டெஸ்லர் காலமானர்.!

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இந்த சாதனத்தில் 4ஜி எல்டிஇ ஆதரவு,புளூடூத் 5.0, இ-சிம் வசதி, யுஎஸ்பி டைப்-சி வசதி, வைஃபை 802.11a/b/g/n/ac, ஸ்மார்ட் வியூ,ஜி.பி.எஸ். க்ளோனாஸ், பீடோ, கலிலியோ உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் மற்ற சாதனங்களை விட இந்த சாதனம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது

 சிப்செட் வசதி

சிப்செட் வசதி

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் ஸ்னாப்டிராகன் 855பிளஸ் 7என்எம் பிராசஸர், குவால்காம் ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

183கிராம் எடை

183கிராம் எடை

இந்த சாதனத்தில் உங்களுக்கு கூடுதல் சேமிப்பிடம் தேவைப்பட்டால், நீங்கள் சாம்சங் கிளவுட், ஒன்ட்ரைவ் அல்லது கூகிள் டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போன் 183கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip Pre-Booking Starts Tomorrow: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X