மார்ச் 17: அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் மாடலை வரும் மார்ச் 17-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்குகொண்டுவருகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை, 109999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் இரண்டு டிஸ்பிளே உள்ளது, அதன்படி இந்த சாதனத்தின் வெளிப்புறம் 1.06-இன்ச் AMOLED டிஸ்பிளே (300x116பிக்சல்) மற்றும் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு இடம்பெற்றுள்ளது. பின்பு முழுமையாக 6.7-இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளே (2636x1080பிக்சல்) இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 21:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில்FHD + ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அருமையான கேமரா வசதி
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனில் 10எம்பி (f/2.4) செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா பற்றி பேசுகையில், 12எம்பி பிரைமரி லென்ஸ்+12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது, மேலும் இதில் எச்டிஆர்10பிளஸ் ஆதரவு, 4கே யுஎச்டி ஆதரவு, ஏஐ தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு வசதி
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். குறிப்பாக மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது மடித்து விரிவாக்குவதற்கு மென்மையான அனுபவத்தை உறுதி செய்கிறது.

எதிர்பார்க்கப்பட்ட பேட்டரி வசதி
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் 3300எம்ஏஎச் இரட்டை பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 18வாட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவருவதால் கண்டிப்பாக பயன்படுத்துவதற்கும் அருமையாக இருக்கும்,சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

நிறங்கள்
மிரர் பிளாக், மிரர் பர்பில் மற்றும் மிரர் கோல்ட் போன்ற நிறங்களில் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் மற்ற நாடுகளில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டால் நிறங்கள் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்
இந்த சாதனத்தில் 4ஜி எல்டிஇ ஆதரவு,புளூடூத் 5.0, இ-சிம் வசதி, யுஎஸ்பி டைப்-சி வசதி, வைஃபை 802.11a/b/g/n/ac, ஸ்மார்ட் வியூ,ஜி.பி.எஸ். க்ளோனாஸ், பீடோ, கலிலியோ உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் மற்ற சாதனங்களை விட இந்த சாதனம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.

சிப்செட் வசதி
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் ஸ்னாப்டிராகன் 855பிளஸ் 7என்எம் பிராசஸர், குவால்காம் ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

183கிராம் எடை
இந்த சாதனத்தில் உங்களுக்கு கூடுதல் சேமிப்பிடம் தேவைப்பட்டால், நீங்கள் சாம்சங் கிளவுட், ஒன்ட்ரைவ் அல்லது கூகிள் டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போன் 183கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications