Samsung Galaxy Unpacked: அறிமுகமானது புது சாம்சங் 5ஜி போன்.. 4.1-இன்ச் கவர் டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் இன்று நடைபெற்ற Galaxy Unpacked நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 (Samsung Galaxy Z Flip 8) போனை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த சாம்சங் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 அம்சங்கள்(Samsung Galaxy Z Flip 8 Specifications): 6.9-இன்ச் AMOLED மெயின் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மெயின் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) வசதி உள்ளது. மேலும் இந்த போனில் 4.1-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த சிறிய டிஸ்பிளே கூட 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) வசதியும் இந்த போனில் உள்ளது.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5(Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் இந்த சாம்சங் போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 போன் வெளியாகி உள்ளது. அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன.
One UI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 மூலம் இந்த போன் இயங்குகிறது. IP48 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
4300எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, வைஃபை 7, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 போனின் எடை 180 கிராம். கிரீம், கிராஃபைட், மின்ட் மற்றும் பிங்க் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 போனின் விலை $1,200 (இந்திய மதிப்பில் ரூ.1,15,000)-ஆக உள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications