Home
Mobile

உஷார் ஐயா உஷாரு.. விலை கம்மினு இந்த Samsung போனை வாங்கிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!

சாம்சங் (Samsung) நிறுவனம் 'சைலன்ட்' ஆக ஒரு "சில்வண்டு வேலையை" பார்த்துள்ளது போல் தெரிகிறது. பட்ஜெட் விலை கஸ்டமர்கள் மத்தியில், சாம்சங் நிறுவனத்தின் "எப்இ" ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலம். அதிக விலை நிர்ணயம் கொண்ட கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள அம்சங்களை "ஃபேன் எடிஷன்" என்கிற பெயரின் கீழ் சற்றே மலிவான விலைக்கு வழங்குவதால், எப்இ மாடல்கள் பட்ஜெட்வாசிகள் மத்தியில் பிரபலம்!

எடுத்துக்காட்டிற்கு.. கேலக்ஸி எஸ்24 மாடலின் ஃபேன் எடிஷன் ஆக கேலக்ஸி எஸ்24 எப்இ மாடல் அறிமுகமானது. இதே பாணியை கேலக்ஸி இஸட் சீரிஸிலும் கொண்டுவர, சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான போது, அது உண்மையிலேயே மிகப்பெரிய குட் நியூஸ் ஆக இருந்தது.

விலை கம்மினு இந்த Samsung போனை வாங்கிடாதீங்க!

இந்நிறுவனம் அதன் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகிய மாடல்களுடன் சேர்த்து கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ (Samsung Galaxy Z Flip 7 FE) என அழைக்கப்படும் இன்னொரு மாடலையும் அறிமுகம் செய்யலாம் என்று தகவல்களும் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள், கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மீது மேற்கொண்டு எந்த ஏதிர்பார்ப்பையும் வைக்க வேண்டாம் என்று கூறும்படியாக உள்ளது

கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது பழைய கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் அப்படியே கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடலில் இடம்பெறும் என்று அர்த்தம்.

விலை கம்மினு இந்த Samsung போனை வாங்கிடாதீங்க!

இது உண்மையாகும் பட்சத்தில்.. சாம்சங் நிறுவனம் அதன் "எப்இ" மாடல்களில் பின்பற்றும் வழக்கம் முற்றிலுமாக மாற்றப்படும். வழக்கமாக ஒரிஜினல் மாடலில் உள்ள சில அம்சங்கள் தான் எப்இ மாடலில் இடம்பெற வேண்டும். ஆனால் சாம்சங் நிறுவனம் அதன் பழைய மாடலில் உள்ள அம்சங்களை புதிய எப்இ மாடலில் சேர்ப்பது - வேடிக்கையாக உள்ளது. பேசாமல் இதற்கு கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 எப்இ என்றே பெயர் வைக்கலாம் (வியாபாரம் ஆகாது என்பதால் கேலக்ஸி இசட் 7 சீரிஸை பயன்படுத்தி கொள்ள பார்ப்பது போல் தெரிகிறது)

ஆனால் கண்டிப்பாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடலின் விலை மலிவானதாக இருக்கும், டெக்மேனியாக்ஸின் லேட்டஸ்ட் அறிக்கையின்படி, கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடலின் விலை 1000 யூரோவிற்கும் (தோராயமாக ரூ.96,000) குறைவாக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மாடல் ரூ.82,999 க்கு வாங்க கிடைக்கிறது.

விலை கம்மினு இந்த Samsung போனை வாங்கிடாதீங்க!

எப்இ மாடல் சற்று சொதப்பினாலும்.. புதிய சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல் நல்ல அப்கிரேட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 உடன் ஒப்பிடும் போது கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் கவர் டிஸ்பிளேவில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும்.

ஒரு லேட்டஸ்ட் லீக்ஸ்-ன்படி, கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல் ஆனது முந்தைய மாடல்களில் காணப்படும் அசாதாரணமான போல்டர் வடிவிலான வெளிப்புற டிஸ்பிளேவை (Folder-shaped outer screen) கொண்டிருக்காது. மாறாக அதை அப்படியே அகற்றி, பெரிய, எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே டிசைனை பெறும்.

விலை கம்மினு இந்த Samsung போனை வாங்கிடாதீங்க!

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஐஸ் யுனிவர்ஸால் பகிரப்பட்ட புகைப்படங்கள் உட்பட சில சமீபத்திய அறிக்கைகள் ஆனது, கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் கவர் டிஸ்பிளே கிட்டத்தட்ட முழுவதுமாக போனின் மேல் பாதியில் நீண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன. இது - அவுட்டர் ஸ்க்ரீனை சுற்றி குறிப்பிடத்தக்க பெசல்களைக் கொண்டிருந்த கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மாடலை போல் இல்லாமல் - ஒரு நேர்த்தியான மற்றும் நவீன தோற்றத்தை வழங்கும்.

இந்த வடிவமைப்பு மாற்றம் ஆனது மற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் ஃபிளிப் போன்களில் ஏற்கனவே செய்தவற்றுடன் ஒத்துப்போகிறது. அழகியல் அடிப்படையில் இனிமேலும் பின்தங்கியிருக்க கூடாது என்று சாம்சங் நிறுவனம் முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் பெரிய கவர் டிஸ்பிளேவானது சுமார் 4 இன்ச் வரை நீளும் என்றும், இது பயனர்கள் இன்னும் வசதியாக அறிவிப்புகளை சரிபார்க்கவும், புகைப்படங்களை எடுக்கவும், ஸ்மார்ட்போனை அன்போல்ட் செய்யாமலேயே ஆப்களை பயன்படுத்தவும் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை கம்மினு இந்த Samsung போனை வாங்கிடாதீங்க!

இதற்கு முன் டிப்ஸ்டர் பாண்டாஃப்ளாஷ் (@PandaFlashPro) வழியாக கிடைத்துள்ள தகவல், ஃபோல்ட் 7 மற்றும் ஃபிளிப் 7 ஆகிய இரண்டுமே முந்தைய மாடல்களில் இருப்பதை விட மென்மையான மற்றும் அதிக "நீடித்த ஹிங் மெக்கானிசம்" உடன் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது. இந்த புதிய ஹிங் சிஸ்டம் தற்போதைய ஃபோல்ட் 6 உடன் ஒப்பிடும்போது ஃபோல்ட் 7-க்கு குறிப்பிடத்தக்க அளவு குறைவான ஹிங் விசிபிலிட்டியை வழங்கும்.

மேலும் இந்த டிப்ஸ்டரின் கூற்றுப்படி, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகிய இரண்டு மாடல்களுமே அவற்றின் முன்னோடிகளை விட பெரிய வேப்பர் சேம்பர் உடன் வரும். இருப்பினும் பழைய மாடல்களில் இருப்பதை போலவே டேப்லெட் வடிவ ஸ்பீக்கர் டிசைன் மற்றும் பட்டன் சிஸ்டம் தக்கவைக்கபடலாம்.

கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 போன்கள் என்ன விலைக்கு வரும்? நம்பத்தகுந்த ஆதாரங்களில் ஒன்றான @PandaFlashPro வழியாக கிடைத்துள்ள தகவலின்படி கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 போன்களின் விலையானது கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி இஸட் போல்ட் 6 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 6 உடன் ஒற்றுப்போகும்.

கேலக்ஸி இஸட் போல்ட் 7 எப்இ மாடலை போலவே சாம்சங் நிறுவனம் இன்னொரு முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனிலும் பணியாற்றுகிறது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடல் ஆகும். இது 2025 மே மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1440 x 3120 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே
- டிஸ்பிளேவின் கீழ் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன்யுஐ 7 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்

- எப் /1.7 அபெர்க்ஷர் மற்றும் 85-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ உடன் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 120-டிகிரி எஃப்ஓவி உடன் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 80-டிகிரி எஃப்ஓவி உடன் 12-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- வைஃபை 7
- ப்ளூடூத் 5.4
- 3900mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip 7 FE Could be Rebranded Version of Galaxy Z Flip 6 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X