Home
Mobile

விலை கம்மியான FE மாடலுடன் வரும் Samsung-ன் அடுத்த Flip போன்.. அதே கேமரா, ஆனா பெரிய டிஸ்பிளே!

2025 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் முதல் ரவுண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி விட்டன. அடுத்த ரவுண்டில் சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சுவாரசியமாக இம்முறை புதிய போல்ட் மற்றும் பிளிப் மாடல்களுடன் சேர்த்து புதிய எப்இ மாடலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) ஆகிய மாடல்களுடன் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் எப்இ (Samsung Galaxy Z Flip FE) மாடல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை கம்மியான FE மாடலுடன் வரும் Samsung-ன் அடுத்த Flip போன்!

இதற்கிடையில் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஸ்மார்ட்போனில் என்னென்ன கேமரா சென்சார்கள் இடம்பெறும் என்கிற தகவல் லீக் ஆகியுள்ளது. கேலக்ஸிகிளப் (GalaxyClub) வழியாக வெளியான லேட்டஸ்ட் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஆனது முந்தைய சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 மாடலில் உள்ள கேமரா செட்டப்பையே கொண்டிருக்கும் என்கிறது.

அதாவது இந்த போனில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 10 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா சென்சார் இருக்கும் என்கிறது. மேலும் இந்த அறிக்கை சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஸ்மார்ட்போனில் டெலிஃபோட்டோ கேமராவை பெற வாய்ப்பில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது

ஆனால் டிஸ்பிளேவில் நல்ல வேறுபாடுகளை காணலாம். முன்னதாக வெளியான லீக்ஸ் தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.85 இன்ச் மெயின் டிஸ்பிளே மற்றும் 4 இன்ச் அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 ஆனது 6.7 இன்ச் இன்னர் பேனல் மற்றும் 3.4 இன்ச் கவர் டிஸ்பிளேவுடன் வருகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஆனது எக்ஸினோஸ் 2500 சீரிஸ் (Exynos 2500 Series) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 மாடலின் உற்பத்தியை விட குறைவாகும்.

சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போன்களின் பலவீனமான விற்பனை செயல்திறனால், சாம்சங் நிறுவனம் அதன் உற்பத்தி இலக்குகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான இது 'ஜி-டைப்' ட்ரிபிள்-போல்டிங் டிஸ்பிளே கொண்ட ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.80,999 க்கும், 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.99,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.99,999 க்கும், 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,11,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,29,999 க்கும், 12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,41,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,65,999க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip 7 Camera Setup Similar To Galaxy Z Flip 6 But will Get Bigger Display Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X