மார்கெட் காலி.. சாம்சங்கின் வேற ரகம்.. பேட்டரி, கேமரா, டிஸ்பிளே.. எல்லாமே மாறுது.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் வகையில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 போனை தூக்கி சாப்பிடும் படியான பேட்டரி சிஸ்டம், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) போனில் கொடுக்கப்பட இருக்கிறது.
ஃபிளிப் போன் மார்கெட்டில் சாம்சங் மாடல்களுக்கான வரவேற்பானது, மற்ற மாடல்களைவிட அதிகமாகவே இருக்கிறது. சொல்லப்போனால், மோட்டோரோலா, ஓப்போ போன்ற நிறுவனங்களின் ஃபிளிப் போன்களை பின்னுக்கு தள்ளி சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) டாப்பில் இருக்கிறது.

கேமரா, சிப்செட் டிசைன் போன்றவற்றில் பட்டையை கிளப்பினாலும், பேட்டரி பேக்கப் மட்டும் சொல்லி கொள்ளும் அளவுக்கு இருப்பதில்லை. ஏனென்றால், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 போனில் 3700mAh பேட்டரி மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், போட்டியாளரான மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ராவில் 4200mAh பேட்டரி வருகிறது.
அதேபோல ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் (OPPO Find N3 Flip) போனில் 4300mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்து வர இருக்கும் சாம்சங் ஃபிளிப் மாடலில் கூடுதல் பேட்டரி பேக்கப் இருந்தால், நன்றாக இருக்கும் என்று அந்த பிராண்ட் பிரியர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
இவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 போனில் 4,000mAh பேட்டரி வரும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஃபிளிப் 6 போனானது, வரும் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி மட்டுமல்லாமல், கேமரா மற்றும் டிஸ்பிளேவிலும் மாற்றங்கள் வரும் என்று தெரிகிறது.
ஏனென்றால், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 போனில் 3.4 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே வந்ததது. ஆனால், இந்த இசட் ஃபிளிப் 6 போனில் 3.9 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே வரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல ஃபிளிப் 5 போனில் 12 எம்பி பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டது.
ஆனால், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 போனில் 50 எம்பி பிரைமரி கேமரா கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் போன்களில் கொடுக்கப்பட்ட கேலக்ஸி ஏஐ பீச்சர்களும் (Galaxy AI Features) இந்த போனில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போனின் மற்ற அம்சங்களானது, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 போனை போலவே இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல விலையிலும் கிட்டத்தட்ட நெருங்கிய நிர்ணயம் இருக்கலாம். ஆகவே, இசட் ஃபிளிப் 5 போனின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது சுருக்கமாக பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 அம்சங்கள் (Samsung Galaxy Z Flip 5 Specifications): இந்த போனில் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. அதோடு 3.4 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே வருகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 4என்எம் சிப்செட் வருகிறது. அட்ரினோ 740 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.
8ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. 12 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்டுள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.82,010ஆக இருக்கிறது. ஆகவே, இசட் ஃபிளிப் 6 மாடலின் ஆரம்ப விலை ரூ.90,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








