Home
Mobile

Samsung-ன் தரமான சம்பவம்.. கையடக்க Flip போனில் இவ்வளவு அம்சங்களா? Samsung Galaxy Z Flip 6 விலை என்ன?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதனுடைய சாம்சங் கேலக்ஸி அன்பாக்டு ஈவென்ட் (Samsung Galaxy Unpacked Event 2024) நிகழ்வை, ஜூலை 10,2024 ஆம் தேதி (இன்று) பாரிஸில் கோலாகலமாக நடத்தியது. இந்த நிகழ்வை சாம்சங் நிறுவனம் அதன் ரசிகர்களுக்காகக சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் சாம்சங் நியூஸ்ரூமில் மாலை 6:30 மணிக்கு (IST) லைவ் ஸ்ட்ரீம் செய்தது. இதில் பல 2 ஸ்மார்ட்போன்கள் (Smartphone), ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) மற்றும் இயர்பட்ஸ் (Earbuds) போன்ற சாதனங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவன இன்று நடந்த நிகழ்வில் இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒன்று சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6) மற்றும் சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6) போன்ற சாதங்களாகும். இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஸ்மார்ட்போன் சாதனத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

Samsung-ன் தரமான சம்பவம்.. கையடக்க Flip போனில் இவ்வளவு அம்சங்களா?

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6):

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஸ்மார்ட்போன் சாதனம் 6.6" இன்ச் அளவு கொண்ட முழு FHD+ டைனமிக் அமோலேட் 2X டிஸ்பிளேவை (FHD+ Dynamic AMOLED 2X Diaplay) கொண்டிருக்கும். இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவரும் மெயின் டிஸ்பிளேவின் அளவு மற்றும் அம்சங்களாகும். மறுபுறம், சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 ஸ்மார்ட்போனின் மற்றொரு டிஸ்பிளே 3.4" இன்ச் FHD தரத்துடன் போனின் மேற்புறத்தில் வருகிறது.

இதில் நோட்டிபிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், வீடியோ பிளேபேக், வெதர் ரிப்போர்ட் போன்றவற்றை பயனர்கள் நேரடியாக அணுகி பயன்டுத்த முடியும். இந்த புதிய சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset) உடன் வெளிவருகிறது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 12GB ரேம் (RAM) உடன் 512GB ஸ்டோரேஜ் (Storage) அம்சத்தை பெறுகிறது.

நினைவு கூற, இதற்கு முன்பு சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த அதன் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்ட 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்ஜை விட, இந்த புதிய போனில் நிறுவனம் மேம்படுதலை வழங்கியுள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஸ்மார்ட்போன் சாதனம் 50MP மெயின் கேமராவை (Camera) 2X டிஜிட்டல் ஜூம் சென்சார், 12MP அல்ட்ரா வைட்டு ஆங்கில் கேமரா உடன் 10MP முன்பக்க செல்பி கேமராவை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 விலை (Samsung Galaxy Z Flip 6 Price):

இந்த புதிய சாம்சங் ஃபிலிப் போன் 4000mAh பேட்டரி (Battery) உடன் வருகிறது. முதல் முறையாக ஃபிலிப் சீரிஸ் போன்களில் சாம்சங் நிறுவனம் வெப்பர் கூலிங் சாம்பேர் (Vapour Cooling Chamber) அம்சத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6) சாதனம் பல AI அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6) சாதனம் இன்று முதல் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6 Price) ஸ்மார்ட்போனின் பேசிக் மாடல் சாதனம் $1099 டாலர் விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 91783 ஆகும். வரும் ஜூலை 24, 2024 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip 6 12GB RAM 512GB Storage 4000mAh Battery Launched Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X