ஃபயரு டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.18,000 கட்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. சாம்சங் ஃபிளிப் மாடல்!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் 2 டிஸ்பிளே, 8ஜிபி ரேம், ஓஐஎஸ் கேமரா போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) போனுக்கு முழுதாக ரூ.18,000 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 அம்சங்கள் (Samsung Galaxy Z Flip 5 Specifications): இந்த போன் 6.7 இன்ச் (2640 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் இன்பினிட்டி பிளெக்ஸ் (Dynamic AMOLED 2X Infinity Flex) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 425 பிபிஐ வருகிறது. இதன் கவர் டிஸ்பிளேவானது, 3.4 இன்ச் (720 x 748 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 306 பிபிஐ மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) வருகிறது. அதோடு ஒன் யுஐ 5.1.1 (One UI 5.1.1) ஓஎஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 4என்எம் மொபைல் (Qualcomm Snapdragon 8 Gen2 4nm Mobile) சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மாடலில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனில் ஈசிம் (eSIM) மற்றும் நானோ சிம் (Nano SIM) சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 12 எம்பி மெயின் வைடு கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) மாடலாகும். அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4K 60fps தர வீடியோ ரெக்கார்டிங் சப்போர் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 10 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த சாம்சங் போனில் IPX8 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. மேலும், டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் ஃபிளிப் மாடலில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 3700mAh பேட்டரி வருகிறது. அதோடு 15W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging) சப்போர்ட் வருகிறது.
மேலும், வயர்லெஸ் பவர்ஷேர் ரிவர்ஸ் சார்ஜிங் (Wireless PowerShare Reverse Charging) சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 187 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த மாடல் மின்ட் (Mint), கிராஃபைட் (Graphite), கிரீம் (Cream) மற்றும் லாவெண்டர் (Lavender) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வந்தது. இப்போது, யெல்லோ (Yellow) கலர் வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் 256 ஜிபி மாடலின் விலை ரூ.99,999ஆகவும, 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,09,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு ரூ.18,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதில் ரூ.10,000 கூப்பன் டிஸ்கவுண்ட்டாகவும், ரூ.8,000 எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுக்கும் வழங்கப்படுகிறது.
ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மாடலை வெறும் ரூ.81,999க்கு வாங்கிக்கொள்ள முடியும். யெல்லோ வேரியண்ட் சாம்சங்.காம் (Samsung.com) தளத்தில் கிடைக்கிறது. சாம்சங் பிராண்டில் ஃபிளிப் போன் வாங்க நினைப்பவர்களுக்கு, ரூ.18,000 டிஸ்கவுண்ட் நல்ல வாய்ப்பையே பெற்றுத் தந்துள்ளது.


Click it and Unblock the Notifications








