Home
Mobile

Samsung Galaxy Z Flip 4 புது கலரில் அறிமுகம்.! விலையில் எதுவும் மாற்றம் உண்டா?

சாம்சங் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Samsung Galaxy Z Flip 4 மற்றும் Galaxy Z Flip 4 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது. சாம்சங்கின் புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்கள் அந்தந்த முன்னோடிகளை விட சில அதிகரிக்கும் மேம்படுத்தல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் போல்டப்பில் ஸ்மார்ட்போன் வரிசையில் இந்த புதிய மாடல்கள் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.

Samsung Galaxy Z Flip வரிசையில் ஒரு புதிய கலர் மாடலா?

Samsung Galaxy Z Flip வரிசையில் ஒரு புதிய கலர் மாடலா?

முன்னோடி மாடல்களுடன் ஓப்ப்பிட்டு பார்க்கையில், புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் வரும் அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் குறிப்பிடத்தக்கதாக இல்லாவிட்டாலும் கூட, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மாடல்களின் விலைகளை இந்தியா மாடல் போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இவை சற்று அதிகமான விலை ஏற்றத்துடன் வெளிவந்தது என்பதையும் நாம் மறக்க முடியாது. அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குள், Samsung Galaxy Z Flip வரிசையில் ஒரு புதிய கலர் வேரியண்ட் வெளிவந்துள்ளது.

Samsung Galaxy Z Flip 4 எத்தனை வண்ணங்களில் வருகிறது?

Samsung Galaxy Z Flip 4 எத்தனை வண்ணங்களில் வருகிறது?

Samsung Galaxy Z Flip 4 புதிய ப்ளூ வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நான்காவது புதிய வண்ண விருப்பமாகும். சாம்சங் நிறுவனம் முன்பு Z Flip 4 ஐ கிராஃபைட், பிங்க் கோல்ட் மற்றும் போரா பர்பில் வண்ணங்களில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. Samsung Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சம் மற்றும் பிற விவரங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

Samsung Galaxy Z Flip 4 விலை என்ன?

Samsung Galaxy Z Flip 4 விலை என்ன?

சாம்சங் இந்தியாவில் இந்த புதிய Samsung Galaxy Z Flip 4 5G மாடலுக்கான புதிய ப்ளூ வண்ண விருப்பத்தை அமைதியாக வெளியிட்டுள்ளது. இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் வெளிர் நீல நிறத்தில் உள்ளது. அதேசமயம், கேமரா அமைப்பு பிளாக் நிறத்தில் உள்ளது. இது இந்தியாவில் போரா பர்ப்பிள், கிராஃபைட் மற்றும் பிங்க் கோல்ட் வண்ண விருப்பங்களுக்கு அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்,ஸ்மார்ட்போனின் விலை பற்றிப் பார்க்கையில்,

சலுகை எதுவும் கிடைக்கிறதா?

சலுகை எதுவும் கிடைக்கிறதா?

இதன் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் முறையே ரூ.89,999 மற்றும் ரூ.94,999 விலையில் கிடைக்கிறது. தற்போதைய சலுகைகளின் ஒரு பகுதியாக, HDFC பேங்க் கார்டைக் கொண்ட வாடிக்கையாளர்கள் ரூ.7,000 கேஷ் பேக்நன்மையுடன், Samsung Galaxy Z Flip 4 வாங்குபவர்கள் ரூ.31,999 மதிப்புள்ள Galaxy Watch 4 Classic டிவைஸை வெறும் ரூ. 2,999 விலைக்கு வாங்கலாம்.

Samsung Galaxy Z Flip 4 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

Samsung Galaxy Z Flip 4 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்


Samsung Galaxy Z Flip 4 5G ஸ்மார்ட்போன் டிவைஸ் 6.7' இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இது போல்டபில் டிஸ்ப்ளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ லேயரைக் கொண்டுள்ளது. 1.9 இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்பிளே உடன் வருகிறது. அதற்கு அடுத்ததாக இதில் டூயல் கேமரா அமைப்பு உள்ளது. Z Flip 4 இல் 12MP பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைட் கேமரா உள்ளது.

என்ன சிப்செட் உடன் இந்த மாடல் கிடைக்கிறது?

என்ன சிப்செட் உடன் இந்த மாடல் கிடைக்கிறது?

இது Snapdragon 8+ Gen 1 SoC மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3700 mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 10MP முன்பக்க கேமரா உடன் வருகிறது. இது சைடில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OneUI 4.1 இல் இயங்குகிறது. புது விதமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை அனுபவிக்கத் துடிக்கும் பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெஸ்ட் மாடலாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip 4 5G Gets a New Blue Colour Option in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X