சத்தமின்றி Samsung போனுக்கு ரூ.25000 விலைகுறைப்பு: இன்றே முந்துங்கள்.!

|

சாம்சங் நிறுவனத்தின் தரமான சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த ஃபிளிப் 3 போன் அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விலைகுறைப்பு

விலைகுறைப்பு

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 மாடல் ரூ.84,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கு ரூ.25,000 விலைகுறைக்கப்பட்டு ரூ.59,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 மாடல் ரூ.88,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கு ரூ.25,000 விலைகுறைக்கப்பட்டு ரூ.63,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த போனின் புதிய விலையானது அதிகாரப்பூர்வ சாம்சங் இணையதளத்தில் பிரதிபலிக்கிறது. குறிப்பாக கிரீம், லாவெண்டர் மற்றும் Phantom Black நிறங்களில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

AMOLED மெயின் டிஸ்பிளே

AMOLED மெயின் டிஸ்பிளே

இந்த போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED மெயின் டிஸ்பிளே மற்றும் 1.9-இன்ச் கவர் ஸ்கிரீன் (சூப்பர் AMOLED பேனல்) வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும்
அருமையாக உள்ளது.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 ஆனது 12MP வைட் (f/1.8, OIS மற்றும் ஆட்டோஃபோகஸ்) மெயின் கேமரா + 12MP அல்ட்ராவைட் (f/2.2) கேமரா என்கிறடூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஃபிள்ப் போன்.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

ஆண்ட்ராய்டு 11

ஆண்ட்ராய்டு 11

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அல்லது 256 ஜிபிஇன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளது. அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

ஆக்டோ-கோர் சிப்செட்

ஆக்டோ-கோர் சிப்செட்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 போனில் 5என்எம் 64-பிட் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல் திறன் கொடுக்கும். அதேபோல் இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

3300 எம்ஏஎச் பேட்டரி

3300 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 போனில் 3300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இதன் "உருவாக்க தரம்" வேற லெவலில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இதை மிகவும் எளிதாக பாக்கெட்களில் வைக்க முடிகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip 3 gets Rs 25,000 price cut: Here's the new price and offers more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X