சாம்சங் வழங்கும் புதிய கேலக்ஸி ஒய் ப்ரோ

Posted By: Staff

சாம்சங் வழங்கும் புதிய கேலக்ஸி ஒய் ப்ரோ
மாறிவரும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி க்வெரிட்டி கீபேடுடன் கூடிய கேலக்ஸி ஒய் ப்ரோ என்ற புதிய மொபைலை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இந்த மொபைலின் முதல் சிறப்பம்சம் அதன் 2.6 இஞ்ச் தொடுதிரை மற்றும் 2.0 மெகா பிக்ஸல் கேமரா ஆகும். மற்ற பழைய சாம்சங்மொபைல்களை விட இந்த புதிய வரவு அனைத்து வகையிலும் அதி நவீனமாக உள்ளது. இதன் கருப்பு க்யுவெர்ட்டி கீபேட் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கிறது.

சாம்சங்காலக்ஸி ஒய் ப்ரோ 800 எம்ஹச்ஸட் மின்திறன் கொண்ட ஒரு ஆண்ட்ராய்டு கேண்டி மொபைலாகும். இதன் டிஸ்ப்ளேயின் 2.66 இன்ச் அகலம் பயன்படுத்துவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

டிஸ்பிளேயின் ரிசலூசனைப் பார்த்தால் 320 x 240 பிக்ஸலாகும். அதனால் அது 256கே அளவு வண்ணங்களை சப்போர்ட் செய்கிறது. மேலும் இதில் ஆட்டோ திருப்புதல் மற்றும் யுஐ ஆட்டோ சுழற்சிக்காக ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் அக்ஸ்லேமீட்டர் போன்ற வசதிகள் உள்ளன.

இதன் 2 மெகா பிக்ஸல் கேமரா வீடியோ ரிக்கார்டிங் வசதியை வழங்குகிறது.மேலும் இது எம்பி4, டிஐவிஎக்ஸ், டபுள்யுஎம்வி, 3ஜிபி, மற்றும் 3ஜி2 வீடியோ பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது. ப்ளூடூத் வசதியும் இந்த
மொபைலுக்கு சிறப்பு சேர்க்கிறது.

இந்த மொபைலில் வயர்லஸ் டேட்டா மேனேஜ்மென்ட் வசதியும் உள்ளது. இதன் வைபை வெளி உலகத்தோடு விரைவாக தொடர்பு கொள்வதற்கு பேருதவி புரிகிறது. நெட்வொர்க்கிங் வசதிக்காக திங்ப்ரீ மொபைல் ஆபிஸ் அப்ளிகேஷன்களும் உள்ளன.

சாம்சங்காலக்ஸி ஒய் ப்ரோவின் பேட்டரி திறன் எல்ஐ-ஐஒன் 1200 எம்அஹச் ஆகும். அதனால் ஓய்வில்லாமல் இந்த மொபைலில் பேசினாலும் இதன் மின் திறன் குறையாமல் இருக்கும். இதை ஒரு குடும்ப மொபைல் என அழைக்கலாம் ஏனெனில் இதன் விலை ரூ.10,000 மட்டுமே.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot